வெளிநாடுகளில் தான் வளர்த்த மரத்தை திருமணம் செய்து கொண்டவர், தான் வளர்த்த நாயை திருமணம் செய்துகொண்டவர், ஏன் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவை எங்கோ வெளிநாடுகளில் நடக்கின்றன. இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா என்று நினைத்திருக்கலாம். ஆனால் அது இந்தியாவிலும் அரங்கேற இருப்பது வியப்பை தருகிறது.
இவர் திருமணம் செய்துகொள்ளப் போவது மட்டுமன்றி ஹனிமூனிற்கு கோவா செல்லவிருப்பதாகவும் திட்டமிட்டுள்ளார். இந்த திருமண நிகழ்வு ஏதோ நான்கு பேர் முன்னிலையில் மட்டும் நடக்கப் போவது கிடையாது. ஜூன் 9 ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சொந்த பந்தங்கள் கூட , ஐயர் மந்திரங்கள் ஓத அனைவரின் ஆசிர்வாதத்தோடு கோவிலில் நடக்கவிருக்கிறது. ஆனால் வித்தியாசம் என்னவெனில் மணமகளும் அவரே மணமகனும் அவரே....
இதுகுறித்து அவரே டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியும் அளித்துள்ளார். அதில் “ இதுவரை இந்தியாவில் இதுபோன்ற திருமணம் நடந்துள்ளதா என்று பார்த்தால் எங்குமே நடக்கவில்லை. எனவே நான்தான் முதல் பெண் என்று நினைக்கிறேன். எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அதேசமயம் என்னை மணப்பெண்ணாக அலங்கரித்து சபை கூட நிற்க வேண்டும் என்று ஆசை. எனவேதான் இந்த முடிவை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.