திருமணம் என்பது இரு மனங்கள் மட்டுமல்ல இரு குடும்பங்கள் மற்றும் உறவுகள் சங்கமிக்கும் நிகழ்வாக இருக்கிறது. 2 குடும்பங்கள் ஒன்றிணையும் போது சந்தோஷத்துடன் கூடவே சவாலும் வருகிறது. இந்த சவாலை பெரும்பாலும் நேரடியாக எதிர்கொள்வது யாராக இருக்குமென்றால், புகுந்த வீட்டிற்கு செல்லும் புது மணப்பெண்ணாக தான் இருக்கும்.
வாழ்க்கை துணையுடன் லைஃபை ஒருபக்கம் என்ஜாய் செய்தாலும் மறுபக்கம் மாமியார் உட்பட புதிய உறவுகளை கவனமாக கையாள்வதில் தான் இருக்கிறது புதுப்பெண்ணின் சாமர்த்தியம். ஒரு பெண் புதிதாக திருமணமாகி செல்லும் வீட்டில் கணவரின் சகோதரியோ ( சிஸ்டர் இன் லா - நாத்தனார்) அல்லது கணவருடைய சகோதரரின் மனைவியோ (சகோதரி முறை) அதே வீட்டில் வசிக்கலாம். மாமியார் வயதில் மூத்தவராக இருக்கும் அதே நேரம் நாத்தனார் அல்லது உங்கள் மாமியாரின் மற்றொரு மருமகள் உங்களை விட சற்று வயதில் மூத்தவர் அல்லது இளயவராகவே இருப்பார்கள்.
வயது வித்தியாசம் குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுடன் புதிதாக திருமணமாகி செல்லும் பெண்கள் கொஞ்சம் ஈசியாக பழகலாம். ஏனென்றால் மாமியாரை விட இவர்களிடம் நீங்கள் பழகும் விதம் புகுந்த வீட்டில் உங்கெளுக்கென்று ஒரு வலுவான உறவை தரும். சரி இப்போது உங்கள் நாத்தனார் அல்லது புகுந்த வீட்டில் ஏற்கனவே இருக்கும் மருமகளை எப்படி சுமுகமாக எப்படி கையாளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
நட்பாகப் பழகுங்கள்:உங்கள் நாத்தனார் பிறந்ததில் இருந்தே அங்கேயே இருப்பதால் உங்கள் வருகை அவருக்கு எவ்வித சங்கடத்தையும் ஏற்படுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் கணவர், மாமனார், மாமியார் பற்றி அவருக்கு அதிக தெரியும் என்பதால் அவருடைய ஃபிரெண்ட்ஷிப் உங்களுக்கு பெரிதும் உதவும். எனவே புகுந்த வீட்டிற்கு சென்றது முதல் வருடம் அன்பாக சிறிது பேசுவது, சில விஷயங்களில் வெளிப்படை தன்மையை கடைபிடிப்பது என்று இருந்தால் உங்களுக்குள் நட்பு ஆழமாகும். நாத்தனார் உங்களிடம் பழக விரும்புவதற்கு ஏற்றவாறு நடக்கவும்.
ஆலோசனை கேளுங்கள்:திருமணமாகி புதிதாக அந்த வீட்டிற்கு செல்வதன் காரணமாக எந்த விஷயங்களை எப்படி செய்ய வேண்டும், வீட்டில் உள்ளவர்களின் வழக்கமான நடைமுறை என்ன உள்ளிட்டவற்றை நீங்கள் புரிந்து கொள்ள நேரம் எடுக்கலாம். குழப்பம் அல்லது தயக்கம் இருக்கும் நேரங்களில் உங்கள் நாத்தனாரிடம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வெளிப்படையாக கேளுங்கள். இது அளவிற்கு மதிக்கிறீர்கள் என்பதை தெரியப்படுத்தும். இதனால் உங்களுடனான நட்பில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.
ஒன்றாக வெளியே செல்லுங்கள்:கணவருடன் நேரம் செலவு செய்தது போக உங்கள் நாத்தனாருடனும் வெளியே சென்று நேரம் செலவிடுவது உங்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுவாக்கும். ஷாப்பிங், சினிமா, கோயில் என உங்கள் நாத்தனார் எங்கே செல்ல விரும்புகிறாரோ அவருடன் நீங்களும் உடன் சென்று வருவது அவரையும் உற்சாகமாக வைக்கும். உங்களை அவர் தோழியாக கருத இதுபோன்ற செயல்கள் வசதியாக இருக்கும்.
சர்ப்ரைஸ் கொடுங்கள்:உங்கள் கணவரின் சகோதரிக்கு என்று பிறந்தநாள் என தெரிந்து வைத்து கொண்டு அவர் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு கிஃப்ட் அல்லது சிறிய பார்ட்டி ஏற்படும் செய்து அவரை அசத்தலாம். உங்களது தனிப்பட்ட முறையிலான வாழ்த்தும், சர்ப்ரைஸும் சேர்ந்து அவரது ஸ்பெஷல் நாளை மறக்க முடியாததாக்கும். இதனால் நீங்கள் அவர் மீது கொண்டுள்ள அக்கறையை புரிந்து கொள்வார்.