ஒவ்வொரு குழந்தைக்கும் தனது அப்பா தான் வாழ்க்கையில் முதல் ஹீரோ. அப்பா மீது அளவுகடந்த அன்பும், மரியாதையும் கொண்டிருக்கின்ற அதே சமயம், அவர் மீதான சிறு அச்ச உணர்வு காரணமாக எப்போதும் தள்ளியே இருப்பார்கள். தனக்கு ஏற்படும் குழப்பங்கள், வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் போன்றவற்றை தந்தையோடு பகிர்ந்து கொள்ள குழந்தைகள் தயக்கம் காட்டுகின்றனர். குழந்தைகள் வளர்ந்த பின்னாலும் கூட, தந்தை உடனான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மற்ற எல்லா நபர்களைக் காட்டிலும் உங்கள் தந்தை தான் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், நண்பராகவும் இருக்க முடியும். அதை உணர்ந்து தந்தை உடனான பந்தத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.