நேசத்துக்குரியவர்களுடன் தங்களின் உச்சக்கட்ட அன்பை பகிர்ந்து கொள்வது செக்ஸ். இருவருக்கும் இடையிலான பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் உடலுறவு, உடல் ஆரோக்கியத்தைக் கடந்து மகிழ்ச்சியையும், திருப்தியையும் கொடுக்கிறது. பலருக்கும் செக்ஸ் என்றால் புணர்தல் என்பதை கடந்து வேறெந்த புரிதலும் இருப்பதில்லை. ஆனால், உடலுறவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன.
உடலுறவுக்கான காலம் : ஒரு மணி நேரத்துக்கு உடலுறவு கொள்ளுதல் என்பதெல்லாம் கற்பனையான விஷயம் அல்லது மிகைபடுத்திக் கூறுவதாகும். உடலுறவுக்காக படுக்கையில் ஆணும், பெண்ணும் நீண்ட நேரம் விளையாடினாலும், அகம் மகிழ்ந்து புணர்தல் என்பது வெறும் 8 முதல் 13 நிமிடங்கள் மட்டுமே என ஆய்வுகள் கூறுகின்றன. சராசரியாக இந்தளவுக்கான காலத்தில் மட்டுமே ஆண், பெண்ணின் உறுப்புகள் தீவிர உணர்ச்சியில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், தங்களின் ரசனைக்கு ஏற்ப புணரும் நேரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சிக்குப் பிறகு செக்ஸ் : உடற்பயிற்சிக்குப் பிறகு செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் எடுத்துள்ள முடிவு மிகவும் சரியானதாகும். ஏனென்றால், உடற்பயிற்சி முடித்த பிறகு உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீரான வேகத்தில் அதிகரித்திருக்கும். அப்போது, டெஸ்டோஸ்டெரோன் மற்றும் ஈஸ்ரோஜன் அளவும் உயர்ந்திருக்கும். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள் என்பதால் தாராளமாக உடலுறவு கொள்ளலாம். வழக்கத்துக்கு மாறான புதுவித மகிழ்ச்சியையும், வேகத்தையும் உணர்வீர்கள்.
பெண்கள் சுய இன்பம் : உடலுறவின்போது திருப்தையடைவதைக் காட்டிலும் கைப் பழக்கத்தில் பெண்கள் வேகமாக திருப்தியடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவில் சுமார் 12 முதல் 20 நிமிடங்கள் வரை திருப்தியடைய எடுத்துக்கொள்ளும் பெண்கள், கைப்பழக்கத்தில் சுமார் 4 முதல் 5 நிமிடங்களில் உணர்வதாக செக்ஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், பெண்களுக்கான திருப்தியை கொடுப்பதில் ஆணின் செயல்பாட்டை பொறுத்தது என சுட்டிக்காட்டுகின்றனர்.
மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆணுறைகள் : பால்வினை தொற்று மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. சரியான ஆணுறைகளை பயன்படுத்தும்போது எஸ்.டி.டி, மற்றும் எஸ்.ஐ.டிகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம். தற்போது தயாரிக்கப்படும் ஆணுறைகள் சிறந்த பாலியல் இன்பத்தை கொடுக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. உடலுறவு கொள்ளும் இருவரும் உட்சபட்ச திருப்தியை அடைய ரிப்பட் மற்றும் மசகு வகை ஆணுறைகள் சிறந்தது என கூறப்படுகிறது.
உடலுறவு கனவு : உடலுறவு கனவை சிலர் தவிர்க்க விரும்புகிறார்கள். உண்மையில் உடலுறவு கனவு என்பது அனைவருக்கும் வரக்கூடிய இயல்பான ஒன்று என நிபுணர்கள் கூறுகின்றனர். உடலுறவு கனவுகளை ரசிப்பவர்கள் புணர்தலில் மகிழ்ச்சியாகவும், ஆக்டிவாகவும் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், உடலுறவு கனவுகள் வந்தால் தேவையற்ற பயத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கின்றனர்.