உடலுறவை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புரிதல் இருக்கும். பலர் தாம்பத்திய உறவை பற்றிய புரிதல்கள் தங்களுக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டாலும் இன்றும் கூட அனைவருக்கும் அதனைப் பற்றிய முழுமையான தெளிவான புரிதல் உள்ளதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் உடலுறவு பற்றி பலர் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் சில சீரியஸான விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.
உடலுறவின் போது வலி ஏற்படுவது : பல தம்பதிகளும் பாலுறவின்போது வலி ஏற்படுவது என்பது மிக சாதாரணமான ஒரு நிகழ்வு என நினைத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் அது உண்மை அல்ல. உடலுறவின் போது வலி ஏற்பட்டால் அவை பாலுறவு மூலம் பரவிய தொற்று நோய்களின் தாக்கமாக கூட இருக்கலாம். வலி அதிகமாக ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
வாயில் உண்டாகும் அல்சர் புண்கள் : சிலருக்கு அடிக்கடி வாயில் புண் உண்டாகும். இவை அல்சர் காரணமாக உண்டாகும் புண்கள் என பலர் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இவை உடலுறவு காரணமாக உண்டான புண்ணாக கூட இருக்கலாம். சாதாரண மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவற்றை போக்க முடியவில்லை எனில் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இரண்டு ஆணுறைகள் உபயோகிப்பது : சிலர் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதாக நினைத்துக் கொண்டு இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் உடலுறவின் போது பயன்படுத்துவார்கள். இதை அவர்கள் பாதுகாப்பானதாக நினைத்துக் கொண்டாலும் அவை உண்மையில் பாதுகாப்பானவை அல்ல. ஆணுறைகள் சில சமயங்களில் மிக எளிதாக கிழிந்து விடக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளதால் இரண்டு ஆணுறைகளை பயன்படுத்தினாலும் இன்னமும் நீங்கள் கர்ப்பம் தரிக்கும் அபாயத்தில் தான் உள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
வாய்வழிப் புணர்ச்சி ஆரோக்கியமானது : பலரும் வாய்வழி புணர்ச்சி ஆரோக்கியமானதாக எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் நீங்கள் மிக ஆரோக்கியமான மிக சுத்தமாக வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி உடலை சுத்தமாக வைத்திருந்தால் மட்டுமே இது ஆரோக்கியமானது ஆகும். இல்லையெனில் தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
உறவில் உச்சகட்டம் அடையாமல் இருத்தல் : ஒவ்வொரு தனிமனிதருக்கும் உடலுறவில் உச்சகட்டம் என்பது ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு உறவுக்கும் முன் ஏற்படும் முன் விளையாட்டுக்கள் மிகவும் முக்கியமானதாகும். சிலருக்கு உறவின் போது ஏற்படும் உச்சக்கட்டம் மிக முக்கியமானதாகவும் இருக்கும். அதே நேரத்தில் ஒரு சிலருக்கு உறவில் ஏற்படும் உச்சகட்டமானது சிலருக்கு உடனடியாகவும், சிலருக்கு உச்சகட்டம் அடைய நீண்ட நேரமும் தேவைப்படும். எனவே உடலுறவில் உச்சக்கட்டம் ஏற்படுவதை வைத்தோ அல்லது ஏற்படாததை வைத்தோ அது தோல்வியில் முடிந்ததாக கருத வேண்டாம்.
முதல் முறை உடலுறவு கொள்ளும் போது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவு : பலரும் தங்கள் பார்ட்னருடன் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பானது குறைவாக உள்ளதாகவே எண்ணிக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் தற்போது வரை அதற்கான எந்தவித மருத்துவ ரீதியான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. நீங்கள் முதல் முறை உடலுறவு கொண்டாலும் உங்களால் கர்ப்பம் தரிக்க இயலும்.
உயிரணுவை முழுவதுமாக பெண்ணுறுப்பிற்குள் செலுத்தாமல் இருந்தாலும் கர்ப்பம் தரிக்க இயலும் : பலரும் உடலுறவின் உச்சக்கட்டத்தில் ஆண்களுக்கு உயிரணு வெளியேறும் நேரத்தில் அவற்றை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் வெளியே எடுத்து விட்டால் கர்ப்பம் தரிக்க இயலாது என்று எண்ணிக் கொண்டு உள்ளார்கள். ஆனால் உண்மையிலேயே உயிரணுவை முழுவதுமாக வெளியேறுவதற்கு முன்பே சில குறிப்பிட்ட அளவிலான உயிரணுக்கள் ப்ரீ எஜாகுக்லேஷன் மூலம் வெளியேறி கர்ப்பம் தரிக்க வைத்து விடும்.