ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

பொதுவெளியில் நெருக்கம் காட்டுவதை நான் எப்போதும் ஒரு சங்கடமான நிகழ்வாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் ஒரு ஜோடிக்குள் இருக்க வேண்டிய மிகவும் தனிப்பட்ட விஷயமான நெருக்கம் 4 சுவர்களுக்குள் இருக்க வேண்டும்.

 • 17

  காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

  காதலர்கள் அல்லது தம்பதிகள் தங்களுக்குள் பாசம் இருப்பதை தனி இடங்களில் காட்டி கொண்டால் அதில் ஏதும் பிரச்சனை இல்லை.. ஆனால் அதை பொது வெளியில் நெருக்கமாக இருப்பது, கட்டி பிடிப்பது, முத்தமிடுவது உள்ளிட்ட செயல்கள் மூலம் காட்டுவது பெரும் விவாதத்திற்குரியதாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 27

  காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

  ஒருபுறம் சிலர் பொதுவெளியில் இருபாலருக்குள் நடக்கும் இந்த விஷங்களை சிலர் ஆதரித்தாலும், பெரும்பாலானோர் பொதுவெளியில் இருவர் செய்யும் அநாகரீகமான விஷயம் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் உண்மையில் நிலைமை முன்பை போல இல்லை என்பதையும் நாம் ஒப்புக்கு கொண்டாக வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் புழங்கும் சாலைகளில் PDA எனப்படும் பப்ளிக் டிஸ்ப்ளேஸ் ஆஃப் அஃபெக்ஷன்-இல் ஈடுபடும் ஜோடி நாளுக்கு நாள் பெருகி கொண்டே போவதை கண்கூடாக பார்க்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 37

  காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

  பெருநகரங்கள் என்றில்லாமல் சிறுநகரங்கள் உட்பட பல பகுதிகளில் நீங்கள் அருகில் உள்ள மால், உள்ளூர் பார்க், தியேட்டர், ஸ்கூல் அல்லது காலேஜ் சாலைகள், பஸ் ஸ்டாப்கள் என இன்று அதை எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். இது சரியா தவறா என்ற விவாதத்தில் நுழைவதை விட, பொதுஇடத்தில் நெருக்கத்தை வெளிப்படுத்தும் ஜோடிகள் பற்றி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்ன நினைகிறார்கள் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

  PDA பற்றி பேசிய பெண் ஒருவர், உண்மையை சொல்வதென்றல் நான் மிகவும் PDA நபராக இருந்தேன். ஆனால் திருமணமாகி பல வருடங்கள் ஆன பிறகு, அதற்கான சகிப்புத்தன்மை போய்விட்டது. பொதுவெளியில் என் கணவர் இதை செய்யவே இல்லை. தம்பதிகள் பொது இடங்களில் முத்தமிடுவதையோ அல்லது கைகளைப் பிடிப்பதையோ பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து பொறாமை கூட ஏற்படுகிறது! ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் இதை செய்வதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் PDA-வை வெறுக்கிறேன் என்றார்.

  MORE
  GALLERIES

 • 57

  காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

  மற்றொரு நபர் பேசுகையில் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவதை நாம் முற்றிலும் எதிர்க்கிறேன், ஏனென்றால் அது அவமரியாதை என்று நான் நினைக்கிறேன். பொதுவெளியில் நெருக்கம் காட்டுபவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சிறு குழந்தைகள், வயதில் மூத்தவர்கள் என யாராக இருந்தாலும் முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். பொது வெளியில் இப்படி PDA-வில் ஈடுபடுவது சுற்றியுள்ளவர்களுக்கு என்ன மனநிலையை கொடுக்கும் என்பதை யோசிக்காத இன்றைய குழந்தைகள் வெட்கமற்றவர்கள் என கடுமையாக சாடி இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 67

  காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

  PDA பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த மற்றொரு நபர், எனக்கு PDA-உடன் எந்த பிரச்சனையும் இல்லை, நான் ஃபன்னாக இருக்கும் விரும்பும் நபர். மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நான் உண்மையில் பொருட்படுத்தவில்லை அதற்காக பிறரிடம் சென்று PDA-வில் ஈடுபடுங்கள் என்று சொல்ல என்னால் முடியாது. ஆனால் நான் இதை ஒரு ஃபன்னாக தான் பார்க்கிறேன் என்றார்.

  MORE
  GALLERIES

 • 77

  காதலர்கள், தம்பதிகள் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவது சரியா..?

  மற்றொரு நபர் கூறுகையில் பொதுவெளியில் நெருக்கம் காட்டுவதை நான் எப்போதும் ஒரு சங்கடமான நிகழ்வாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் ஒரு ஜோடிக்குள் இருக்க வேண்டிய மிகவும் தனிப்பட்ட விஷயமான நெருக்கம் 4 சுவர்களுக்குள் இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட நெருக்கத்தை பொதுமக்கள் மத்தியில் எதற்காக தம்பதிகள் அல்லது காதலர்கள் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  அது பாசம் என்றால் பொதுவெளியில் காட்டப்படும் பாசத்திற்கு ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்று காட்டமாக கூறி உள்ளார்.

  MORE
  GALLERIES