தொழிலதிபர், தொழில் முணைவோர் , அமெரிக்க அதிபரின் டிரம்பின் மகள் என ஏகப்பட்ட பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருந்தாலும் தன்னுடைய முக்கியப் பொறுப்பாகக் கருதுவது தன் மூன்று பிள்ளைகளை வளர்ப்பதுதான் என்கிறார் இவாங்கா டிரம்ப்.
2/ 10
இரண்டு மகன்கள் ஒரு மகள் என 3 பிள்ளைகளைக் கொண்டிருக்கும் இவாங்கா மிகவும் பியூட்டி மற்றும் ஹெல்த் கான்ஷியஸ் கொண்டவர். அவரைப் போலவே தன் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என நினைப்பவர். அப்படிதான் வளர்த்தும் வருகிறார்.
3/ 10
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு தொகுப்பாளர் உங்கள் பெண் குழந்தைக்கு சொல்லும் அழகு ஆலோசனை என்று கேட்டதற்கு “தினமும் காலையில் எழுந்து குழந்தைகளின் தேவைகளை செய்து கொடுப்பதே என் தலையாய பணி.
4/ 10
நான் என் குழந்தைகளுக்கு வெளிப்புற அழகைக் காட்டிலும் உட்புற அழகையே மேம்படுத்த நினைக்கிறேன்.
5/ 10
கண்டிப்பாக வெளிப்புற அழகும் அவசியம்தான். இருப்பினும் நம்மை சிறந்தவராகத் தீர்மானிப்பது உள்புற அழகுதான். இது என் குழந்தைக்கு மட்டுமல்ல எல்லா குழந்தைகளுக்கும் நான் சொல்லவிரும்புவதும் அதுதான்.
6/ 10
பெண் குழந்தைகள் தன்னுடைய தன்நம்பிக்கை, மன உறுதியை வளர்த்துக் கொண்டாலே அழகான பெண்களாகத் திகழ்வார்கள். சரும அழகு, சருமப் பாதுகாப்பு என்பது சுய திருப்தி, சுய சந்தோஷத்திற்கானது.
7/ 10
என்னுடைய பதின் பருவத்தின்போது என் அம்மா நடு இரவானாலும் எழுப்பி என் மேக்அப்புகளை களைக்கச் சொல்வார். அப்படியே தூங்குவது சருமத்தை கடுமையாக பாதிக்கும் என்பார். அது உண்மையும் கூட. அதுதான் 38 வயதிலும் இளமைத் தோற்றத்திற்குக் காரணம் .
8/ 10
நான் காலையில் 5 மணிக்கு எழுவதற்கு மற்றொரு காரணம் என் குழந்தைகள் எழும்போது பார்க்ககூடிய முதல் நபர் நானாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அதற்காகவே அவர்கள் எழுவதற்கு முன் உடற்பயிற்சி செய்து குளித்துவிட்டு ஃபிரெஷாக இருப்பேன்.
9/ 10
நான் என் வாழ்க்கையின் பாதி நாட்களை கடந்துவிட்டேன். இருப்பினும் இன்றும் என் குழந்தைகளோடு சிறு பிள்ளையைப் போல் கார் விளையாடுகிறேன். அவர்களுக்குக் கதை சொல்கிறேன்.
10/ 10
பால் கொடுத்து இரவு கதை சொல்லித் தூங்க வைப்பது வரை நான் அவர்களோடு என நேரத்தை ஒதுக்குகிறேன். என் பணிகளைப் போல் , என் அலுவலக மீட்டிங்கைப் போல் இவற்றையும் நான் செய்யத்தவறியது இல்லை” என்கிறார்.