தீபாவளி 2020 : உங்கள் உறவினர்களுடன் வீட்டிலேயே பண்டிகையை கொண்டாட சில டிப்ஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை மனதில் வைத்து நெருங்கிய நபர்களை மட்டுமே அழைக்க வேண்டும். முக கவசங்கள், போதுமான சமூக இடைவேளியை உறுதி செய்ய வேண்டும்.
Web Desk | November 13, 2020, 4:28 PM IST
1/ 7
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால் அது பண்டிகையை பாதிக்கக்கூடாது. இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது.
2/ 7
விளக்குகளின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவது மட்டுமல்லாமல் மக்களை ஒன்றிணைக்கிறது. ஆனால் தொற்று நோய் பரவல் காரணமாக நாம் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளோம். அதையும் மீறி நாம் செல்ல வேண்டும் என எண்ணினால் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது.
3/ 7
இந்த தீபாவளியை கொண்டாட உங்கள் இல்லத்திற்கு நீங்கள் இந்த விருந்துகளின் போது, கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில் வைத்து நெருங்கிய நபர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மேலும் அனைத்து விருந்தினர்களும் முக கவசங்கள் அணிந்துகொள்வதையும், போதுமான சமூக இடைவேளியை பராமரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் :
4/ 7
1. உணவு மற்றும் பானங்கள் : சுவையான உணவு மற்றும் பானங்கள் ஒவ்வொரு பண்டிகையின் போது முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், நீங்கள் ஒரு சுத்தமான இடத்திலிருந்து உணவை ஆர்டர் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே சமைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு பாரம்பரிய பண்டிகை என்பதால், ஆரோக்கியமான உணவை சமைத்து பரிமாறலாம். உங்கள் உணவு பட்டியலில் நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
5/ 7
2. அலங்காரங்கள் : இந்த ஆண்டு குறைவான நபர்களே உங்கள் வீட்டிற்கு வருகை தர வாய்ப்புள்ளதால் நீங்கள் குறைவான இடத்திலேயே அழகாக அலங்கரிக்க முயற்சி செய்யுங்கள். வழக்கம் போல நாற்காலிகளை ஒரு மேசையை சுற்றி வைப்பது ஒரு சலிப்பான விருப்பமாகும். உங்கள் வரவேற்பு அறையை அல்லது வெளிப்புற இடத்தை ஒரு நல்ல வண்ணமயமான அமைப்பாக மாற்றுங்கள். ஒரு கம்பளம் மற்றும் சில அழகான மெத்தைகளை பயன்படுத்தி அமரும் இடத்தையும் அதனை சிறிய விளக்குகளாலும் அலங்கரியுங்கள்.
6/ 7
3. தீம் : ஒரு சாதாரண அலங்காரங்கள் நன்றாகவே இருந்தாலும் கூட, தீம் அடிப்படையிலான ஒன்று இனிமையானது. உங்கள் விருந்துக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை தேர்ந்தெடுத்து, அதன்படி ஆடை அணியுமாறு உங்கள் விருந்தினர்களை கேட்கலாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் ஒரே தீம் அதாவது ஒரே நிற உடைகள் போன்றவற்றை மேற்கொள்வது கூடுதல் அழகை தரும். இது உங்கள் பண்டிகை கொண்டத்தின் அழகை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
7/ 7
4. தீபாவளி பிளேலிஸ்ட் : தனித்துவமான இசை இல்லாமல் பண்டிகை கொண்டாட்டம் நிறைவடையாது. உங்கள் கொண்டத்தை தொடங்குவதற்கு முன்பு தீபாவளி பிளேலிஸ்ட்டை தொகுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிளேலிஸ்ட் சில நடன பாட்டுகள் மற்றும் சில தீபாவளி தீம் டிராக்குகளின் கலவையாக இருக்க வேண்டும். பிளேலிஸ்ட்டில் உள்ள பாடல்கள் நடனங்களுக்கு ஏற்றவையாக இருக்கும் வகையில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆடல், பாடலுடன் உங்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுங்கள்.