Happy Father's Day 2020 : உங்கள் அப்பா உங்களின் விஷயத்தில் எப்படி நடந்துகொள்வார்..? இந்த லிஸ்டில் இருக்கிறாரா..?
சில அப்பாக்கள் பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்புடனும் அதேசமயம் பாசத்துடனும் நடந்துகொள்வார்கள். சிலர் கோபமே படாமல் கேட்டதையெல்லாம் வாங்கி தரும் அப்பாவாக இருப்பார்கள்.


சில அப்பாக்கள் பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்புடனும் அதேசமயம் பாசத்துடனும் நடந்துகொள்வார்கள். சிலர் கோபமே படாமல் கேட்டதையெல்லாம் வாங்கி தரும் அப்பாவாக இருப்பார்கள். இப்படி அப்பாக்களின் குணாதிசயங்களின் வகைகளைப் பார்க்கலாம்.


ஆதிக்கம் செலுத்துபவர் : இவ்வகை அப்பாக்கள் பிள்ளைகளின் தேவைகள் என்ன , அவர்களுக்கு எது நன்றாக இருக்கும், எது பிடிக்க வேண்டும் இப்படி எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்து வாங்கிக்கொடுப்பார்கள். அதாவது சந்தோஷ் சுப்பிரமணி படத்தின் அப்பா கதாபாத்திரத்தைப் போன்றவர்கள்.


கடின உழைப்பாளி : குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே கடினமாக உழைப்பார்கள். வெளியூரில் வேலை பார்ப்பார்கள் அல்லது கூடவே இருந்து வேலை பார்த்து சம்பாதிப்பார்கள். இதனால் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்குவது கூட அரிதானதுதான். இவர்களின் வீட்டில் அம்மாதான் எல்லாவற்றையும் பிள்ளைகளுக்குச் செய்வார்கள். ஆனால் பணம் கொடுப்பது எல்லாம் தந்தையாக இருக்கும்.


நண்பன் : இவர்கள் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனின் படங்களில் வரும் அப்பாக்களைப் போன்றவர்கள். நண்பனைப் போல் நடந்துகொள்வார்கள். இந்த அப்பாக்களிடம் காதல், தோல்வி, வெற்றி என அனைத்தையும் பகிர்ந்துகொள்ளலாம். இவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பிடித்த அப்பாவாக இருப்பார்கள்.


ஒப்புக்குச்சப்பானாக இருப்பார்கள் : அதாவது பேருக்கு முன் இனிஷியல் போட்டுக்கொள்ள மட்டுமே தந்தையாக இருப்பார்கள். மற்றபடி எதற்குக் உதவாத அப்பாவாக சுற்றித் திரிவார்கள். அம்மாவின் கடின உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கும்.


கட்டுப்பாடு கொண்டவர் : நல்லொழுக்கம், தூய்மை, பொறுப்பு என இருக்க வேண்டும் என எப்போதும் இறுக்கமாக நடந்துகொள்வார். அங்கு அப்பா வருகிறார் என்றால் வீட்டில் அலார்ட் ஆகி பெட்ரூமிற்குள் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார்கள்.