காமம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி. பதின்பருவத்தில் உச்சத்தில் இருக்கும் உணர்ச்சி, வயதாக வயதாக மெல்ல குறையும். ஆண், பெண் இருபாலருக்கும் பதின் பருவத்தில் இருந்து காமரசம் ததும்பும் என்றாலும், அது நீண்ட காலத்துக்கு நீடிப்பது என்பது ஒருவரின் வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, உள்ளிட்ட பல கூறுகளை உள்ளடக்கி உள்ளது.
வயது அதிகரிக்கும்போது உடலில் உள்ள ஹார்மோன்களிலும் மாற்றம் ஏற்படும். இதனால் உங்களின் உணர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு, பாலின ஈர்ப்பும் குறைய தொடங்கும். அதுமட்டுமல்லாது, ஆண், பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்டிரியும் செக்ஸூவல் மூட் நிலைத்திருப்பதற்கு காரணம் என்பதால், இருவருக்கு இடையே அதிகமான மனக்கசப்புகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பது அவசியம்.
20 வயதில் காமம் : ஆண்களைப் பொறுத்தவரையில் 20 வயது இளைஞர்களுக்கு உட்சபட்ச காமத்தில் இருப்பார்கள். அவர்களுக்குள் உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டெரோன், உணர்ச்சியின் உட்சபட்ச நிலையிலேயே அவர்களை வைத்திருக்கும். அதேவேளையில் விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சனைகளையும் ஆண்கள் எதிர்கொள்வார்கள். பெண்களுக்கும் உணர்ச்சிகள் பெருகிய நிலையிலேய இருந்தாலும், உடலுறவு வைத்துக்கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
30 வயதில் காமம் : 30வது வயதிலும் ஆண்களுக்கான உணர்ச்சி என்பது நன்றாக நிருக்கும். ஆனால், 40 வயதை நெருங்கும்போது அவை மெல்ல மெல்ல குறைய தொடங்கும். காரணம் என்னவென்றால், ஆண்கள் அந்த நேரத்தில் தொழில், குடும்பம் உள்ளிட்டவைகளின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், ஆண்களின் காம உணர்ச்சி குறையும். பெண்களைப் பொறுத்தவரையில் 30 வயதில் அதிக உணர்ச்சியுடன் இருப்பார்கள். இளைமைக் காலத்தைக் காட்டிலும், இந்த வயதில் உடலுறவு வைத்துக்கொள்வதில் மிகவும் விருப்பத்துடன் இருப்பார்கள்.
கர்ப்ப காலம் : கர்ப்ப காலத்தை பொறுத்தவரை ஆண், பெண் இருபாலரும் வேறொரு மன நிலைக்கு சென்றுவிடுவார்கள். பெண்களுக்கு உடல்ரீதியாக ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். ஆணகள் உளவியல் ரீதியாக கம்போர்ட் ஜோனுக்கு சென்றுவிடுவார்கள். உணர்ச்சிகள் இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய மனநிலையில் இருப்பார்கள். குழந்தை பிறந்த பிறகு அவர்களை கவனிப்பது, பால் கொடுப்பது, உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டிய சூழல் ஆகிய காரணங்களால் சிறிது காலத்துக்கு இருபாலருக்கும் செக்ஸூவலில் அதிகம் நாட்டம் இருக்காது
40வயதுக்கு மேல் காமம் : இருபாலருக்கும் படிபடியாக செக்ஸூவல் மூட் குறைந்து வரும். இந்த காலகட்டத்தில் ஆண்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு இருப்பார்கள். உணர்ச்சிகள் குறைந்து விறைப்புதன்மை இல்லாமல் இருக்கும். இதயநோய், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் எடுக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு செக்ஸூவல் எண்ணம் இருக்காது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகளில் மாற்றம் ஏற்படும். உடல் எடை கூடும். தூக்கமின்மை உள்ளிட்டவற்றால் பாதிக்கபடுவார்கள். மேலும், குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் அவர்களுக்கும் செக்ஸூவல் எண்ணம் இருக்காது. எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு கொண்டாட்டம்.
என்ன செய்ய வேண்டும்? : உடல் நலனில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது நல்லது. ஆரோக்கியமாக இருந்தும் உங்கள் இணையருடன் செக்ஸ் வைத்துக்கொள்வதில் ஈடுபாடு இல்லையென்றால், மருத்துவரை சந்தியுங்கள். அவர்கள் உணர்ச்சி மற்றும் விரைப்புத்தன்மைகளை தூண்டும் ஹார்மோன்களை ஆக்டிவேட் செய்ய மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அதன்பின்னர் நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.