எல்லா கதை காதல் கதைகளும் திருமணத்தில் முடிவதில்லை. அதேபோல அனைவருமே மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. ஆனால் திரைப்படங்களை மிஞ்சும் ரொமான்டிக் காதல் கதைகள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறியுள்ளது. காதலித்து திருமணம் கொண்டாலும் பெற்றோர்கள் பார்த்து நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், நீடித்த திருமண உறவில் ஒரு சில விஷயங்கள் அவசியமாக இருக்க வேண்டும். பொதுவாக திருமணமான தம்பதிகளுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டாலும், பல ஆண்டு வெற்றிகரமாக வாழும் தம்பதிகள் கூறும் ஆலோசனைகள் பலருக்கும் உதவியாக இருக்கும்.
பேலன்ஸ், சப்போர்ட் மற்றும் நேரம் ஒதுக்குதல் என்கிறார் சோனம் கபூர்
பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹுஜா இருவருமே பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் காதல் உறவை வெற்றிகரமாக கொண்டு செல்வது இருவருக்கும் இருக்கும் அற்புதமான புரிதல் மற்றும் திருமண உறவை அழகாக பேலன்ஸ் செய்வது தான். இவர்களின் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது இருவரும் மற்றவர்களின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரண்டாவதாக மற்றவருக்காக நேரம் ஒதுக்குகிறார்கள், ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அதேபோல வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
காதல் என்றால் மரியாதை என்கிறார் ஷாருக் எத்தனையோ நடிகர் நடிகைகள் காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் மிகவும் ரொமாண்டிக்கான காதல் கதை பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் உடையது என்பதை மறுக்கவே முடியாது. பல ஆண்டுகளாக காதலித்து, திருமணம் செய்து கொண்டு தற்போது வரை காதல் குறையாத தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள் ஷாருக்கான் மற்றும் கவுரி. திருமணத்தை வெற்றிகரமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரே ஒரு ரகசியம் தான் இருக்கிறது என்று ஷாருக் தெரிவித்துள்ளார். ‘என்னை பொறுத்தவரை காதல் என்பது ஒரு பெண்ணுக்கு மரியாதை செலுத்துவதுதான்’ என்று அழகாகக் கூறியுள்ளார்.
எவ்வளவு பிசியாக இருந்தாலும், எங்களுக்குத் தான் பரஸ்பர முக்கியத்துவம், என்கிறார் பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் ஆக பட்டம் வென்ற பின்னர், தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி, தற்போது ஹாலிவுட்டில் தன் வெற்றிக் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் பாப் மியூசிக் ஸ்டாரை அதிலும் தன்னை விட 10 வயது குறைந்தவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இருவருமே உலக நாடுகளில் பறந்து பறந்து பணியாற்றும் மிகவும் பிஸியான பிரபலங்களாக இருந்தபோதிலும், தங்கள் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பிசியாக இருந்தாலும், கணவர் தான் முக்கியம், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கண்டதும் காதல் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு ஷாம்பு விளம்பரத்தின் படப்பிடிப்பின் போது கிரிக்கெட்டர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர். பார்த்தவுடன் இருவருமே காதலில் விழுந்துவிட்டார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு வாமிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. எவ்ளோ பிஸியாக இருந்தாலும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவு குடும்பத்துடன் நேரம் செலவழிக்க தவற மாட்டேன் என்று குடும்பமே முக்கியம் என்று கூறியுள்ளார் அனுஷ்கா ஷர்மா.