முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

ஆணும், பெண்ணும் காதலில் இருந்தாலும் சரி அல்லது திருமண வாழ்வில் இருந்தாலும் சரி அவர்களுக்கு இடையே ஒரு நெருக்கம், காதல், அன்பு, அன்யோன்யம் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.

  • 16

    உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

    சமீப காலமாக உங்கள் பார்ட்னர் உங்களிடம் இருந்து விலகிச் செல்கிறாரா? நீங்கள் எந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்கள் அன்பை திருப்பிச் செலுத்துவது இல்லையா? அல்லது, உங்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கிரரா? அப்படியானால், உங்கள் இருவருக்கும் இடையே சில பிரச்சினைகள் இருக்கிறது என்றும், அதை நீங்கள் தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

    MORE
    GALLERIES

  • 26

    உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

    ஆணும், பெண்ணும் காதலில் இருந்தாலும் சரி அல்லது திருமண வாழ்வில் இருந்தாலும் சரி அவர்களுக்கு இடையே ஒரு நெருக்கம், காதல், அன்பு, அன்யோன்யம் உள்ளிட்டவை இருக்க வேண்டும். ஆனால், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இவை குறைந்து வரும்போது அங்கு ஏமாற்றத்தை தவிர வேறெதுவும் மிஞ்சாது. இறுதியாக தனிமை தான் மிஞ்சும். உங்கள் பார்ட்னர் ஏன் உங்களை தவிர்க்க நினைக்கிறார் என்பதற்கான சில காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 36

    உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

    உங்கள் பார்ட்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை : உங்களுடன் இருக்கும் தருணங்களை சௌகரியமானதாக அல்லது நம்பிக்கைக்கு உரியதாக உங்கள் பார்ட்னர் உணரவில்லை என்று அர்த்தம். உங்கள் மீது ஒரு அவநம்பிக்கையுடன் பார்ட்னர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இதனால், உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக உங்களை நெருங்கி வர மாட்டார்கள். உங்கள் மீது உங்கள் பார்ட்னருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது உங்கள் கடமை.

    MORE
    GALLERIES

  • 46

    உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

    அவர்கள் சோர்வடைந்திருக்கலாம் : தினசரி நடவடிக்கைகள், வேலை, வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது போன்ற காரணங்களால் உங்கள் பார்ட்னர் சோர்வு அடைந்திருக்கக் கூடும். இதனால், உங்களுடன் நெருங்கி வருவதற்கான எண்ண ஓட்டம் அல்லது எனர்ஜி ஆகியவை இல்லாமல் போகலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

    உடலுறவுக்காக அவசரப்படுத்துவது : எந்தவித பாசமோ, காதலோ இல்லாமல் வெறுமனே உடலுறவுக்காக மட்டுமே நீங்கள் அணுகி வருகிறீர்கள் அல்லது அதற்காக அவசப்படுத்துகிறீர்கள் என்று உங்கள் பார்ட்னர் யோசிக்கும் தருணத்தில், உங்களுடனான நெருக்கம் குறைந்து விடும். அது மட்டுமல்லாமல், உங்களுடன் நேரம் செலவழித்து, கொஞ்சிப் பேசி, அதற்குப் பிறகே விளையாட்டை தொடங்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்காதபோது ஏமாற்றம் அடைந்து விலகிச் செல்வார்கள்.

    MORE
    GALLERIES

  • 66

    உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!

    தனித்தனி உலகில் வாழ்வது : திருமணமான புதிதில் ஆணும், பெண்ணும் தங்கள் பார்ட்னரிடம் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். எந்தவொரு விஷயம் என்றாலும் உடனுக்குடன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், நாளாக, நாளாக இந்தப் பந்தம் கொஞ்சம், கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. இறுதியாக இருவருமே வார்த்தைகளை அளந்து பேசத் தொடங்குகிறார். இதன் விளைவாக இருவருக்கும் இடையே நெருக்கம் இல்லாமல் போய்விடுகிறது. ஆகவே எப்போது போல மனம் விட்டு பேசிப் பழகுங்கள்.

    MORE
    GALLERIES