

இந்த ஜோடிகள் எங்கு சென்றாலும் அன்றை டிரெண்ட் அவர்கள்தான். அவர்களின் அடுத்த புகைப்படம் எப்போது வெளியாகும், எப்போது வெளியே செல்வார்கள் என பார்த்துக் கொண்டே இருக்கும் ரசிகர் கூட்டம் இவர்களுக்கு அதிகம். அப்படி யார் இந்த ஜோடிகள் ?


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்: தமிழகமே இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற காதல் ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். எப்போதும் சுதந்திரப் பறவைகளாக சுற்றித் திரியும் காதல் ஜோடி. இவர்கள் தான். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தால் போதும் லைக்குகள் கோடிகளை எட்டும். அதுமட்டுமன்றி இவர்கள் ரசித்த இடங்களையும் ஷேர் செய்வார்கள். நண்பர்களுடனான கெட்டுகெதர், பண்டிகைக் கால வாழ்த்துகள் புகைப்படம் என இந்த ஜோடி எப்போதும் இணைய தளங்களில் தங்களை டிரெண்டிங் லிஸ்டிலேயே வைத்திருப்பார்கள்.


தீபிகா பல்லிகல் மற்றும் தினேஷ் கார்த்திக் : மிஸ்ட்ரி என்கிற வார்த்தைக்கு இந்த ஜோடி அத்தனை பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுக்குள் காதல் மலர்வதற்கான சந்திப்புகள் கூட விளையாட்டு, உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு மைதானம் என்றுதான் இருந்தன. பின் இந்த ஜோடி இருவரும் தங்களின் காதலை அறிவித்தபின் இவர்களின் ரசிகர்கள் எல்லோருமே கொண்டடினார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி இன்றும் எந்த புகைப்படம் போட்டாலும் அது டிரெண்டாகி வலம் வருகின்றன.


தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் : ஹப்பாடி எப்படியோ இந்த ஜோடி ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டது என்கிற எண்ணம்தான் இவர்களின் இணைப்பில் ரசிகர்களுக்கு இருந்த நிம்மதி. எந்த நிகழ்ச்சிக்கு இவர்கள் சென்றாலும் கேட்கப்படும் முதல் கேள்வி ’எப்போது உங்கள் திருமணம்’ என்பதுதான். ஆனால் யாரும் எதிர்பாராத தருணத்தில் இவர்களின் திருமணத்தை அறிவித்த அன்று மட்டும் லட்சங்கள் முறை அந்த ஸ்டேடஸ் லைக் செய்யப்பட்டது. இவர்கள் எந்த இடம், எந்த நிகழ்ச்சி, எந்த ரெஸ்டாரண்ட் என எங்கு சென்றாலும் கண் சிமிட்டாத கேமராக்களே இருக்க முடியாது. அதுவும் இந்த ஜோடியின் காதல் யாரும் எதிர்பார்க்காதது.


பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் : எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் உன் கரம் பிடிப்பேன் என்கிற சபதத்தோடு ஆரம்பமனதுதான் இந்தக் காதல். அதில் வெற்றியும் பெற்று டிரெண்டிங்கில் இருக்கின்றனர். ஆம், பிரியங்காவைக் காடிலும் 11 வயது சிறியவரான ஜோனஸ் காதலில் வயது பெரும் விஷயமே இல்லை என எல்லா ஸ்டீரியோ டைப்புகளையும் உடைத்தெரிந்த எடுத்துக்காட்டு ஜோடி. இந்த ஜோடி பிரிந்துவிடும் என பலரால் விமர்சனம் செய்யப்பட்டன. அவர்களின் பேச்சுகளுக்கெல்லம் தங்களின் திருமண அறிவிப்பின் மூலம் முற்றுப் புள்ளி வைத்தனர். இந்த ஜோடி சமீபத்தில் கலிஃபோர்னியாவில் பனி கட்டிகளில் விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் கூட 3 கோடி லைக்ஸை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.


அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி : விராட் எப்போதும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார் என்னுடைய வெற்றிக்குப் பின் என் மனைவிதான் இருக்கிறார் என்று, அதேபோல் அவர் மைதானத்தில் சிக்ஸ் அடிக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அனுஷ்கா தான் என்று பத்திரிகைகளாலும் விமர்சிக்கப்படும் ஜோடி. அதேபோல் விராட் எந்த கிரவுண்டில் மேட்ச் ஆட சென்றாலும் அவரை உற்சாகப்படுத்த அனுஷ்காவும் உடன் செல்வார். மைதானத்தில் விராட் சோர்ந்து போனாலும் இறுதிவரை அனுஷ்கா சோர்ந்து போகாமல் உற்சாகமூட்டுவார். இப்படி ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் தங்களின் வெற்றியைத் தீர்மானித்து அதற்கு ஈடுகொடுக்கும் ஜோடி. இவர்கள் விளையாட்டு மைதானம் , உடற்பயிற்சிக் கூடம் என எங்கு இருந்தாலும் அந்தப் புகைப்படம் பரவிய அடுத்த நொடி லைக்ஸ் அள்ளும்.