ஆண் பெண் உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம் தான். அதேபோல கணவன் மனைவி எவ்வளவு அந்நியோன்யமாக இருந்தாலும் அவரவர்களுக்கென்று விருப்பு வெறுப்பு உண்டு. ஆண்களைப் பொறுத்தவரை, பெண்கள் செய்யும் சில விஷயங்கள் பிடிக்காது. ஆண் மற்றும் பெண் இருவருக்குமே, தங்கள் திருமண உறவு, பாலியல் உறவு குறித்து பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளில் தன்னுடைய மனைவி அல்லது கணவன் எப்படி நடக்கக்கூடாது என்பதும் அடங்கும். ஆண்கள் மீது பலவிதமான குறைகள் பெண்களுக்கு உண்டு. அதே போல, பாலியல் உறவு மற்றும் படுக்கையறையில் பெண்களின் சில செயல்பாடுகளை ஆண்கள் வெறுக்கிறார்கள். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
உடலுறவில் போலியான ஆர்கசம் : பெண்கள் ஆர்கசம் அதாவது உடலுறவில் உச்சம் அடைவதை பெரும்பாலும் போலியாக வெளிப்படுத்துகிறார்கள். அதாவது fake orgasm. சில நேரங்களில் ஆண்களால் இதைக் கண்டறிய முடிவதில்லை. ஆனால், அவர்களுக்குத் தெரியவரும் போது, வெறுக்கிறார்கள். அது மட்டுமின்றி, ஆண்களுக்கு தங்கள் மீது ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம் அல்லது நீங்கள் அவரை வெறுக்கிறீர்கள் என்ற எண்ணம் தோன்றலாம். பாலியல் உறவில் உங்கள் எதிர்பார்ப்புகளை கணவருடன் பகிர்வது அவசியம்.
எனர்ஜி இல்லாமல் சோர்வாக இருப்பது : சில ஆண்களுக்கு நாள் முழுவதும் தீவிரமாக வேலை செய்து சோர்வாக இருந்தாலும், செக்ஸ் என்பது மகிழ்ச்சி தருவதாக அமையும். பெண்களைப் பொறுத்தவரை, நாள் முழுக்க வேலைசெய்வது இரவில் சோர்வாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற வேலைகளையெல்லாம் ஆர்வத்துடன் செய்து பாலியல் உறவில் ஈடுபடும் போது மட்டும் எனர்ஜி இல்லாமல் இருப்பது உங்கள் கணவரை கண்டிப்பாக கடுப்பேற்றும்.
படுக்கையில் மட்டுமே செக்ஸ் : பெண்களை விட ஆண்களுக்கு செக்சுவல் ஃபேண்டசி மிகவும் அதிகம். ஒரே இடத்தில், அதாவது படுக்கையில், உங்களின் படுக்கையறையில் மட்டுமே செக்ஸ் என்பது ‘போர்’ ஆகத் தோன்றும். எனவே, கணவரிடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இல்லாமல், கிட்சன் ரொமான்ஸ், டைனிங் டேபிள் செக்ஸ் என்று வெவ்வேறு இடங்களில் முயற்சி செய்யலாம்.
பேசிக்கொண்டே இருப்பது : எந்த நேரத்தில் எவ்வளவு பேச வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும் பாலியல் உறவில் ஈடுபடும்போது சின்ன சின்ன உரையாடல்களாக இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். அது மட்டுமின்றி ஒரு சில பெண்கள் செக்ஸில் ஈடுபடும் போது வீட்டு பிரச்சனைகள், அலுவலகத்தில் உள்ள பிரச்சினைகள் அல்லது கணவரை பற்றிய குறைகளை அப்போது கூறும் வழக்கம் உண்டு. இது ஆண்களுக்கு சுத்தமாக பாலியல் உறவின் மீது ஈடுபாடு இல்லாமல் ஆக்கிவிடும். எனவே அந்த நேரத்தில் தேவையற்ற பேச்சை தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.