ஆனால், பலரின் வாழ்க்கையில் இதுவே முற்றுப்புள்ளியை தந்து விடுகிறது. அடிக்கடி சண்டை இடுவதால் வாழ்க்கையே நரகமாக மாறி விடும். இது போன்று சண்டைகள் வராமல் இருக்க சிலவற்றை நாம் பின்பற்றினாலே போதும். குறிப்பாக கணவருடன் அடிக்கடி சண்டை வராமல் இருக்க சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை தெளிவாக இனி பார்ப்போம்.
இடைவேளை : உங்கள் கணவருடன் அடிக்கடி சண்டை வருவது போன்று தோன்றினால், நீங்கள் சிலவற்றில் நிதானமாக செயல்பட வேண்டும். குறிப்பாக சண்டை போடும்போது பெரிய சண்டையாக மாற போகிறது போன்று தோன்றிய உடனே அந்த இடத்தில் இருந்து இடைவேளை எடுத்து கொள்ளுங்கள். மேலும் அந்த இடத்தில் இருக்காதீர்கள், வேறு எதாவது வேலையை செய்ய தொடங்குங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து உங்கள் கணவருடன் பொறுமையாக பேசுங்கள். இப்படி செய்வதால் எளிதில் அந்த சண்டை தீர்ந்து விடும்.
சண்டைகள் : உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சண்டை ஏற்படும் போதெல்லாம் அதை அடுத்தடுத்த நாட்களுக்கு தள்ளி போடாதீர்கள். இது உறவில் பெரிய சிக்கலை உண்டாக்கும். மாறாக அன்றைய பிரச்சனைகளை அன்றைக்கே தீர்த்து விடுவது நல்லது. எனவே உங்களுக்கு ஏற்படும் சண்டைகளை சுமுகமாக பேசி சரிசெய்து விட்டு தான் நீங்கள் இரவு தூங்கவே செல்ல வேண்டும் என்று உளவியல் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இல்லையேல் இந்த சண்டை நீண்டு கொண்டே போய் பல பாதிப்புகளை உங்கள் உறவில் ஏற்படுத்தும்.
கட்டி அணைத்தல் : பெரிய சண்டைகளை கூட சிறிய விஷயங்களால் சரிசெய்து விட முடியும். உங்கள் கணவருடன் சண்டை ஏற்பட்டால், அவரை கட்டி அணைத்தோ அல்லது முத்தம் தந்தோ அன்பை பரிமாறி கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு எந்த அளவிற்கு அவர் முக்கியம் என்பதை அவர் புரிந்து கொள்வார். இதன்மூலம் சண்டைகள் எளிதில் சரியாகி விடும்.