திருமணத்திற்கு முன்பு பெரும் கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழும் ஆண், பெண் எவராயினும், திருமணத்திற்குப் பிறகு “ஆசை 60 நாள்; மோகம் 30 நாள்’’ என்னும் பழமொழிக்கு ஏற்ப மாறிவிடுகின்றனர். அதாவது, திருமண வாழ்வின் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இருக்கும் வேகமும், ஆசையும் அதற்கடுத்த ஆண்டுகளில் குறைந்து கொண்டே போகிறது.
ஆசைகள் குறைவதற்கு காரணம் என்ன? இன்றைய உலகம் அவசர கோலத்தில் இயங்கும் இயந்திர உலகமாக இருக்கிறது. பணி நிமித்தமாக கணவர் ஓர் இடம், மனைவி ஓர் இடம் என வாழும் சூழல் இங்கு பரவலான காட்சியாக உள்ளது. கணவன், மனைவி ஒரே ஊரில் பணிபுரிந்து, ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கூட இருவரும் இணை சேருவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கின்றன அல்லது மனச்சோர்வு, உடல்சோர்வு போன்ற காரணங்களால் செக்ஸ் வாழ்க்கையை மெல்ல, மெல்ல மறந்து விடுகின்றனர்.
செக்ஸ் வாழ்வில் கிடைக்கும் இன்பம்: உடல், மனம் என இரண்டுக்கும் பேரின்பம் கிடைக்க காரணமாக இருப்பது செக்ஸ் வாழ்க்கை ஆகும். செக்ஸ் உறவின்போது நம் மூளையில் இருந்து மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. கவலை, ஸ்டிரெஸ் போன்றவற்றுக்கு இது மருந்தாக அமைகிறது. ஆண், பெண் இருவருக்கும் இடையிலான பந்தத்தை பலப்படுத்துவதாக இது இருக்கிறது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் செக்ஸ் வாழ்க்கையை நீங்கள் புறக்கணிக்கும்போது எதிர்மறையான பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
அடிக்கடி ஸ்டிரெஸ் ஏற்படும் : செக்ஸ் உறவின் போது நமது உடலில் இருந்து வெளியாகும் ஹார்மோன்கள் நம் எண்ண ஓட்டங்களை மேம்படுத்தி மகிழ்ச்சியை தூண்டக்கூடியது ஆகும். குறிப்பாக, செக்ஸ் உறவின் உச்சகட்டத்தின்போது வெளியேறும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோனானது உணர்வுபூர்வமாக நேர்மறையான விளைவுகளை தருபவை ஆகும். ஆனால், செக்ஸ் உறவை தவிர்ப்பதால் இவற்றை இழப்பதுடன் ஸ்டிரெஸ் அதிகரித்து விடுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும் : ஆண், பெண் உறவு கொள்ளும் போது உடலில் இமியூனோகுளோபின் என்னும் நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருக்கெடுக்கிறது. இது வைரஸ்களை எதிர்த்துப் போராடும். ஆனால், செக்ஸ் வாழ்க்கையை தவிர்ப்பதால் இந்த எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால், சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதில் தாக்கி விடுகின்றன.
ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் ஏற்படலாம் : மாதம் ஒன்றில் குறைந்தபட்சம் 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களைக் காட்டிலும், 7 முறைக்கும் குறைவாக உறவு கொள்ளும் ஆண்களுக்கு நாளடைவில் விதைப்பை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்தில் ஒருமுறை மட்டுமே உறவு கொள்ளும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை பாதிக்கப்படும் : செக்ஸ் உறவு கொள்ளும்போது உடல் ரீதியாக, மனம் ரீதியாக, உணர்வு ரீதியாக மாற்றங்கள் தென்படுவதை உணர முடியும். ஆனால், அதை தவிர்க்கும்போது இவை அனைத்துமே பாதிக்கப்படும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செக்ஸ் வாழ்க்கையை தொடர முயற்சி செய்தால் உடலும், மனமும் ஒத்துழைப்பு அளிக்காது.