உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் 'காதலர் தினத்தை' காதலர்கள் மட்டுமின்றி, திருமணமான அனைவரும் கொண்டாடுவார்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், திருமணமானவர்கள் தங்களது காதலர் தினத்தை ரொமான்ஸாக கொண்டாடுவார்கள். எப்படி என்றால் புதிதாக கல்யாணம் ஆன கணவன் மனைவி மட்டும் இருக்கும் வீட்டில் வீடு முழுதும் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து கொண்டாடுவர். அதிலும் பல கலர்கள் பல ஜோடிப்புகள் என அன்றைய தினமே அமர்க்களமாக இருக்கும்.
அப்படி இந்த வருட காதலர் தினத்தை அட்டகாசமாக கொண்டாட வேண்டுமானால், முதலில் உங்கள் பெட் ரூமை ரொமான்டிக்காக அலங்கரிக்க வேண்டும். அதிலும் காதலைக் குறிக்கும் சிவப்பு நிறத்தைக் கொண்டு அலங்கரித்தல் வேண்டும். அந்தவகையில் பல மெழுகுவர்த்திகளை கொண்டு காதல்கள் தினத்தை அட்டகாசமாக அலங்கரிக்க சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன் படி அலங்கரித்து காதலர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
ஹார்ட் வடிவ மெழுகுவர்த்திகள் : இன்றைய தினத்தில் படுக்கை அறை மிகுந்த ரொமான்ஸாக இருக்க வேண்டுமானால், அங்கு நிச்சயம் மெழுகுவர்த்திகள் இருக்க வேண்டும். அப்படி படுக்கை அறையை சிவப்பு நிற மெழுகுவர்த்திகளால் அலங்கரியுங்கள். ஒருவேளை வெள்ளை நிற மெழுகுவர்த்தி தான் இருக்கிறதென்றால், மெழுகுவர்த்தியின் மேல் சிவப்பு நிற ரிப்பனை ஹார்ட் வடிவத்தில் கட் செய்து கட்டிவிடுங்கள். காதலின் அடையாளமே ஹார்ட் தான். இதற்காக நீங்கள் பல கடைகளுக்கு ஏறி இறங்க வேண்டிய அவசியமே இல்லை. இருக்கவே இருக்கு இண்டர்நெட், கூகுள் செய்து அதில் உங்களுக்கு பிடித்ததை ஹார்ட் வடிவத்தில் அலங்கரித்து உங்கள் பார்ட்னரை மயக்கலாம்.
இயற்கை முறையில்...இந்த காதலர் தினத்தன்று உங்கள் காதலன் அல்லது காதலியை கவர இயற்கை முறையிலான மெழுகுவர்த்தியை நீங்கள் ட்ரை செய்யலாம் ஒரு சில லோக்கல் மார்க்கெட்டுகளில் இயற்கை மெழுகுவர்த்திகள் விற்பனைக்கு உள்ளது அதை நீங்கள் வாங்கலாம் அல்லது நீங்களே இயற்கை முறையிலும் தயாரிக்கலாம். சாதாரண மெழுகுவர்த்தியை வாங்கி அதை உருக்கி அதனுடன் சில இயற்கை எசன்ஸ்களை சேர்த்தும் அதை வீடு முழுவதும் ஏற்றி வைத்து உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். பலரும் செயற்கை முறையை பின்பற்றி காதலர் தினத்தை கொண்டாடுவார்கள், ஆனால் நீங்கள் இயற்கை முறையில் அதுவும் வாசம் மிகுந்த மெழுகுவர்த்திகளை வாங்கி வீட்டில் ஏற்றினால் உங்கள் பார்ட்னரால் அதை மறக்கவே முடியாது.
எளிமையான பொருட்கள்...காதலர் தினத்தன்று காஸ்ட்லியான பொருட்களை வாங்கிக்கொடுத்து தான் உங்கள் பார்ட்னரை மகிழ்விக்க வேண்டும் என்பதல்ல. வீட்டில் இருக்கும் கிரயான்ஸ்களை வைத்தும் கூட சூப்பரான ஒன்றை நீங்கள் உருவாக்கலாம். இதற்கு முதலில் பெரிய மெழுகுவர்த்திகளை கடையிலிருந்து வாங்கி அதில் சில கோட்டிங் உங்களுக்கு பிடித்த கலர்களை கொடுக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த வகையில் மெழுகுவர்த்திகளை வடிவமைத்து அதில் தேவையான நிறங்களை கொடுத்தும் உங்கள் பார்ட்னரை அசத்தலாம்.
ரோஜாப்பூ :ரோஜாப்பூ இதழ்கள் உங்களின் பெட் ரூமில் அவசியம் இருக்கவேண்டும். அதுவும் ரெட் ரோஸ் தான். ஏனென்றால் ரோஜாப்பூக்களுக்கு நல்ல குணமுண்டு. உங்கள் பார்ட்னருக்கு நல்ல பீலிங்க்ஸை வர வைக்க இது நிச்சயம் உதவும். மேலும் இவை உங்கள் ரூமை நல்ல மணத்துடன் வைத்திருக்கும், படுக்கை அறையில் நறுமணமிக்க மெழுகுவர்த்திகளுடன், பாட்பூரி என்னும் உலர்ந்த ரோஜா இதழ்களை அறையின் தரையில் தூவிவிடுங்கள். இது நறுமணம் மட்டுமல்லாமல், ரொமான்ஸையும் அதிகரிக்க உதவும். ஒவ்வொரு மெழுகுவர்த்திகளுக்கு இடையில் உங்கள் காதலை சொல்லும் வகையிலான ரோஜாக்களை வைக்கவேண்டும். அது உண்மையான ரோஜாவாக இருக்கலாம் அல்லது நீங்களே உங்கள் கைகளால் வரைந்த ரோஜாவாக கூட இருக்கலாம்.
பிரெஞ்சு வெண்ணிலா...வெண்ணிலா எசன்ஸின் வாசம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இதன் வாசம் பலரையும் மயக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் இதை பயன்படுத்துவார்கள்.இதன் புகழுக்கு காரணம் அதன் நிறம் மட்டுமல்லாது அதிலிருந்து கிளம்பும் வாசம் அனைவரின் மனதையும் மயக்கும். அந்த வகையில் நீங்களும் உங்கள் பார்ட்னருக்கு வெண்ணிலா எசன்ஸ் மற்றும் காபி பீன்ஸ் கலந்த மெழுகுவர்த்தியை உங்கள் கைகளால் செய்து நாளை சூப்பராக கொண்டாடுங்கள்.
மெழுகுவர்த்தியுடன் கார்டுகள்: உங்கள் துணையிடம் உங்கள் காதலை தெரிவிக்க பெட் ரூமில், அருமையான காதல் வாக்கியம் எழுதிய கார்டுகளுடன், ஒரு பாக்ஸ் ஸ்ட்ராபெர்ரி ப்ளேவர் சாக்லெட்டுகளை, பெட் மீது வைத்துவிடுங்கள். அதுவும் அவர் படுக்கை அறையில் நுழையும் போது கண்ணில் படுமாறு ஆங்காங்கே மெழுகுவர்த்திகளுடன் வையுங்கள். இது அவரது மனதில் அன்பை அதிகரித்து, உங்கள் மீது முத்த மழையைப் பொழிய வழிவகுக்கும்.
காதலர் தினத்திற்கு படுக்கை அறையை அலங்கரிக்கும் போது, பளபளப்பான சாடின் தாள்களை தரையில் படுக்கை அறையின் தரையில் பயன்படுத்துங்கள். சோபா மற்றும் படுக்கை அறையை அலங்கரிக்க தேவைப்படும் பொருட்களில் ஒன்று தான் குஷன். எனவே சில்க் அல்லது மொசுமொசுவென்று இருக்கும் சிவப்பு நிற குஷன்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஒயின் ஒரு சிறப்பான பாலுணர்வைத் தூண்டும் பானம். எனவே வீட்டை மெழுகால் அலங்கரிக்கும் போது, ஒரு பாட்டில் ஒயினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.