முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

ஆண், பெண் இடையிலான தாம்பத்ய உறவை நிச்சயமாக இனப்பெருக்கத்திற்கான வழிமுறை மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது.

  • 19

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    ஆண், பெண் இடையிலான தாம்பத்ய உறவை நிச்சயமாக இனப்பெருக்கத்திற்கான வழிமுறை மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது. ஆணும், பெண்ணும் பேரின்பம் அடைவதற்கான வழிமுறையாக இது இருக்கிறது. பாலியல் உறவுக்கான முக்கியத்துவம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    குறிப்பாக கலாச்சாரம், சமூக நம்பிக்கைகள், தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. கவிதை இயற்றுவது, நடனம் ஆடுவது, பாடல் பாடுவது போல கலைநயம் மிகுந்த விஷயமாக சிலர் இதை பார்க்கின்றனர். சிலர், வாழ்வில் உள்ள மற்ற விஷயங்களை போல இதுவும் ஒரு அங்கம் என்று சாதாரணமாக கடந்து செல்கின்றனர். அதே சமயம், தாம்பத்ய உறவில் ஈடுபட இருப்பவர்கள் கீழ்காணும் விஷயங்களை தங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில், குதூகலமான உறவை கொண்டாட இவை அடிப்படையாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 39

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    கருத்தொற்றுமை : பாலியல் உறவு என்பது வெறுமனே இரு உடல்கள் சேரும் நிகழ்வு அல்ல. இரு மனங்களும் சங்கமிக்க வேண்டும். இருவருக்குமே மனதில் ஆர்வமும், ஏக்கமும் இருக்க வேண்டும். யாரேனும் ஒருவருக்கு மன விருப்பம் இல்லை என்றாலும் கூட இந்த நடவடிக்கை திருப்திகரமானதாக அமையாது. இருவரின் ஆசைகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 49

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    பாதுகாப்பு : பாலியல் ரீதியில் பரவக் கூடிய நோய்களை தடுக்கவும், தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவும் பாலியல் உறவின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். குறிப்பாக ஆணுறை அணிவது கட்டாயமாகும். அதேபோல பெண்ணுறை, டெண்டல் டாம்ஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    உரையாடல் : எந்த பேச்சும் இன்றி அமைதியான முறையில் இதை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் ஆசைகளை வார்த்தைகளால் நீங்கள் வெளிப்படுத்தலாம். பார்டனரின் அழகை வர்ணிக்கலாம். இந்த உறவை எவ்வளவு குதூகலமாக நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள் என்பதை எடுத்துரைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 69

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    சுகாதாரம் : தம்பதியர்கள் இருவரும் பாலியல் உறவை சௌகரியமானதாக மாற்றவும், நம்பிக்கை அதிகரிக்கவும் சுகாதாரம் முக்கியமாகும். முடிந்தவரை பாலியல் உறவுக்கு முன்பு சின்னதாக குளியல் போடலாம். அதேபோல பாலியல் உறவுக்கு முன்னும், பின்னும் சிறுநீர் கழிப்பது தேவையற்ற தொற்றுகளை தவிர்க்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 79

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    ரிலாக்ஸ் : ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைப் போல அவசரம் காட்ட வேண்டியதில்லை. ஆழ்ந்த பெருமூச்சு விட்டு, நின்று நிதானமாக தொடங்கி ஒவ்வொரு அணுவாக ஆனந்தம் அடைய நிறைய இருக்கிறது என்பதை மனதில் வைத்து செயல்படவும்.

    MORE
    GALLERIES

  • 89

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    முன் விளையாட்டு : ரெஸ்டாரண்ட் செல்லும் நீங்கள் விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு, ஒரு சூப் அருந்தி உங்கள் உடலையும், மனதையும் தயார் செய்து கொள்கிறீர்கள் அல்லவா! அதேபோல தான் இல்லற வாழ்க்கையும் கூட. பிரதான விளையாட்டில் இறங்கும் முன்பாக முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்களின் பிணைப்பை அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 99

    தாம்பத்திய உறவை கடமையே என தொடங்காதீங்க.. முதலில் இதையெல்லாம் செய்வது அவசியம்..!

    உணர்ச்சிவசப்பட வேண்டாம் : தாம்பத்ய உறவின்போது உணர்ச்சி வசத்துடன் செயல்படுவது உங்கள் அனுபவத்தை பாதிக்கக் கூடும். ஸ்ட்ரெஸ் மிகுந்த மனநிலை, கவலை நிறைந்த அல்லது வெறுப்பு நிறைந்த சூழலில் இதை முயற்சிக்க வேண்டாம். கொஞ்சம் நேரமெடுத்து அதற்கெல்லாம் தீர்வு கண்ட பிறகு இந்த நடவடிக்கையில் நீங்கள் இறங்கலாம்.

    MORE
    GALLERIES