முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

தேனிலவுக் காலம் என்று கூறப்படும் திருமணமான சில மாதங்களுக்குப் பின்னே நீங்கள் நேசித்த எல்லாமும் வெறுப்பாகத் தோன்றும்.

  • 18

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    திருமணம் என்பது ராட்சத ராட்டினத்தில் சுற்றுவது போல இருக்கும். முதல் ஆண்டு அல்லது முதல் இரண்டு ஆண்டுகள் தெளிந்த நீரோடையில் மிதந்து செல்லும் இலையைப் போல எந்தத் தடங்கலும், பிரச்சனையும் இருக்காது. சின்ன சின்ன வேறுபாடுகள் முதல், பெரிய கருத்து வேறுபாடுகள் உட்பட, பலவற்றுக்கும் இருவருமே விட்டுக்கொடுத்தும், சண்டை போடாமலும் செல்வீர்கள்.

    MORE
    GALLERIES

  • 28

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    ஆனால், தேனிலவுக் காலம் என்று கூறப்படும் திருமணமான சில மாதங்களுக்குப் பின்னே, குறிப்பாக மூன்றாம் ஆண்டு துவக்கத்தில், நீங்கள் நேசித்த எல்லாமும் வெறுப்பாகத் தோன்றும். திருமணமான முதல் வருடங்களில் கிட்டத்தட்ட அனைத்து ஜோடிகளும் பின்வரும் சில பொதுவான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 38

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    பணம் : கணவன் மனைவிக்கு இடையே மிகப்பெரிய வேறுபாட்டை உண்டாக்குவதில், முக்கிய இடத்தில் இருப்பது பணம். ஒரு குடும்பமாக இருப்பது என்பது குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் சேர்ந்து நிறைவேற்றுவது. வருமானம் மற்றும் செலவுகளை பகிர்ந்து கொள்வது ஆகியவை அடங்கும். சேமிப்பு, எந்த செலவுகள் முக்கியமானவை, தேவையில்லாத செலவுகள் ஆகிய பணம் சார்ந்த விஷயங்களில் கணவன் மனைவிக்கும் சண்டைகள் ஏற்படுவது மிகவும் இயல்பானது.

    MORE
    GALLERIES

  • 48

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    பாலியல் உறவில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு : திருமணம் ஆன புதிதில், பாலியல் உறவில் இருக்கும் உற்சாகமும், ஈடுபாடும், மகிழ்ச்சியும், நாளடைவில் குறைந்து விடும். நீங்கள் பாலியல் உறவில் திருப்தியாக உணராமல் போகலாம் அல்லது போதுமான அளவு செக்ஸ் இல்லை என்று தோன்றலாம். ஆர்வமின்மை, இயந்திரம் போன்ற பாலியல் உறவு போன்றவை உங்களை சோர்வடையச் செய்யலாம். இதனாலேயே, உங்கள் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். எனவே, உங்கள் திருமண வாழ்க்கை பெரிய சிக்கலின்றி செல்ல, செக்ஸ் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். உங்கள் நெருக்கம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாலியல் உறவில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 58

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    வீட்டு வேலை மற்றும் வீடு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் : சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போடக் கூடாது என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், அதுவே உங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகி இருக்கும். உதாரணமாக, வீட்டு வேலைகள் செய்வதில் பிரச்சனை ஏற்படக்கூடும். யார் எந்த வேலையைப் பகிர்வது என்ற பிரச்சனை, மிகப்பெரிய சண்டையாக மாறலாம்.

    MORE
    GALLERIES

  • 68

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    குழந்தை பற்றிய பிடிவாதம் : திருமணமாகி சில மாதங்களுக்குப் பின்னர், குழந்தையைப் பற்றி குடும்பத்தினரும், உறவினர்களும் கேட்கத் துவங்குவார்கள். சில நேரங்களில், கணவன் மனைவிக்கு இடையே குழந்தை பற்றி வேறு கருத்துகள் தோன்றி, பிரச்னையை ஏற்படுத்தலாம். ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதமும், மற்றொருவர் பல்வேறு காரணங்களுக்காக வேண்டாம் என்பதும் கணவன் மனைவிக்கும் விரிசல் ஏற்படுத்தும். குழந்தையைப் பற்றி இருவருமே, தெளிவாக பேசி முடிவுக்கு வரவேண்டும்.

    MORE
    GALLERIES

  • 78

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    மாற்றங்கள் : திருமண உறவு என்பதே ஒருவர் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதே போல, காலப்போக்கில், நாம் அனைவருமே சில மாற்றங்களை எதிர்கொள்வோம். காதலிக்கும் போது, திருமணமான புதிதில் இருந்தது போல இப்போது இல்லை என்பது கணவன் மற்றும் மனைவி இருவரின் புகார். இருவருக்குமே பல்வேறு பொறுப்புகள் இருப்பதால், இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. மாற்றம் வரும் போது ஏற்றுக்கொண்டு, மாறுதலைப் புரிந்து கொண்டு, உறவை மேம்படுத்த வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 88

    புதுமணத் தம்பதிகள் முதல் மூன்று வருடங்களில் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளும் சமாளிக்கும் வழிகளும்..!

    மாமனார் மற்றும் மாமியார் : பெண்களையே அதிகம் பாதித்தாலும், கணவன் மனைவி இருவருக்குமிடையே தோன்றும் பிரச்சனைகளில் சிலவற்றுக்கு மாமனார் மற்றும் மாமியார் முக்கிய காரணமாக இருக்கின்றனர். கணவன் மனைவியின் அந்தரங்க விஷயம் உட்பட பலவற்றில் மூக்கை நுழைத்து, தேவையற்ற கருத்து வேறுபாடுகளை உண்டாக்குவார்கள். சில நேரங்களில், உறவுகளுக்குள் எல்லைகள் வகுப்பது அல்லது அவர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விடுவது போன்றவை கணவன் மனைவி உறவு பாதிக்காமல் இருக்கும்.

    MORE
    GALLERIES