கன்னித்தன்மை என்ன என்பதற்கான விளக்கம் சமூகத்தில் பலவாறாக உள்ளது. இயற்கையாக கன்னித்தன்மை என்றால் என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை. யார் ஒருவர், மற்றொரு நபருடன் உடலுறவு கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களே கன்னித்தன்மை உடையவர்கள் ஆவர். ஆக, ஒருவர் கன்னித்தன்மை இழக்கிறார் என்றால், அவர் தன் துணையுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்று பொருள்.
ஹார்மோன் மாறுபாடு : செக்ஸ் உறவு கொள்ளும் போது, நம் உடலுக்கும், மனதுக்கும் குதூகலத்தை கொடுக்கக் கூடிய பல்வேறு வகையான ஹார்மோன்களை மூளை வெளியிடும். இது மனிதர்களின் ஸ்ட்ரெஸ்-ஐ குறைத்து, மகிழ்ச்சியான உணர்வுகளை மேம்படுத்த உதவும். இது மட்டுமல்லாமல், உறவு கொண்ட நபர் உடனான பிணைப்பு மற்றும் நம்பிக்கையை இது அதிகரிக்கும்.
மார்பகங்கள் உறுதியாகும் : செக்ஸ் உறவு கொள்ளும் போது, மார்பகங்களுக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால், மார்பக தசைகள் தூண்டப்படும். இதன் விளைவாக மார்புகள் முன்பு இருந்ததைக் காட்டிலும் வலிமை அடையும் அல்லது இறுக்கம் அடையும். குறிப்பாக, மார்புகளில் ரத்த அதிகரிப்பதன் காரணமாக நிப்பிள்களில் உணர்வு அதிகரிக்கும்.
பெண்ணுறுப்பில் மாற்றம் ஏற்படும் : கன்னித்தன்மையை இழப்பதால் பெண்களின் பிறப்பு உறுப்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும். பெண்ணுறுப்பு சுவர்களின் விசியும் தன்மை அதிகரிக்கும். இதனால், முன்பை காட்டிலும் இலகுவாக மாறும். இது மட்டுமல்லாமல், பெண்ணுறுப்பில் கிளர்ச்சியின் முக்கிய பகுதியாக இருக்கும் கிளைடோரீசிஸ் பெரியதாக மாறும். இதனால், அடுத்தடுத்த செக்ஸ் உறவின் போது பெண்ணுறுப்பில் வலி குறைந்து, இன்பம் அதிகரிக்கும்.
மாதவிலக்கு தள்ளிப் போகலாம் : பெண்கள் முதல்முறையாக செக்ஸ் உறவு கொண்டு, கன்னித்தன்மையை இழக்கும்போது மாதவிலக்கு தள்ளிப் போகலாம். விவரம் அறியாத பெண்கள், இதை கர்ப்பத்தின் அறிகுறியாக கருதிக் கொள்வார்கள். ஆனால், கர்ப்பத்திற்கான பிற அறிகுறிகள் தென்படும் வரையில் அந்த கேள்வி எழ வேண்டியதில்லை. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இதுபோன்று மாதவிலக்கு தள்ளிப் போகலாம்.