ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

சிறந்த துணையை தேர்ந்தெடுக்க, உங்களின் தற்போதைய சமூக வட்டத்திற்கு அப்பால் உள்ளவர்களைச் சந்திப்பதற்கான வழிகளை உருவாக்கி செயலில் ஈடுபடுங்கள்.

 • 17

  உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

  இன்றைய கால கட்டத்தில் சிறந்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் பல்வேறு வேறுபாடுங்கள் இருக்க கூடும். இதனால் நமக்கு ஏற்ற நபரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. இருக்கும் உறவுகளிலே ஆண், பெண் உறவு தான் பல சிக்கல்களை கொண்டது. எனவே நீங்கள் உங்களின் துணையை தேர்வு செய்யும் போது சிலவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டி இருக்கும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 27

  உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

  செயல்பாடுங்கள் : சிறந்த துணையை தேர்ந்தெடுக்க, உங்களின் தற்போதைய சமூக வட்டத்திற்கு அப்பால் உள்ளவர்களைச் சந்திப்பதற்கான வழிகளை உருவாக்கி செயலில் ஈடுபடுங்கள். இதன்மூலம் பலவிதமான மனிதர்களை சந்திக்க முடியும். அவர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் சிறந்த துணை தானாகவே கிடைப்பார்கள் என்று நினைப்பது சரியல்ல. நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களுடன் பழக தொடங்கும் போது தான் உங்களுக்ககான ஒருவரை காணுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 37

  உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

  30 ஆண்டு பரிசோதனை : உங்களுக்கான துணையை தேர்வு செய்வதற்கு முன்னர் 30 ஆண்டுகள் அவருடன் நீங்கள் சேர்ந்து வாழ்வதற்கு தேவையான குணநலன்கள் என்னென்ன என்பதை வரையறுத்து கொள்ளுங்கள். அதே போன்று இந்த குணங்கள் உங்களுக்கு துணையாக வர போகிறவரிடமும் இருக்க வேண்டியதை உறுதி செய்து கொள்ளவும். இப்படி செய்வதால் சிக்கலற்ற மணவாழ்க்கை அமையும்.

  MORE
  GALLERIES

 • 47

  உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

  எதிர்கால சிந்தனை : தேவையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தும் ஒருவரை துணையாக தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக உங்களின் எதிர்கால எண்ணங்களை அவர் மதிப்பவராக இருத்தல் வேண்டும். அதே போன்று நீங்களும் அவரின் கனவுகளை மதிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களால் கவனம் செலுத்துவோரை தேர்ந்தெடுக்காமல் இருப்பது சிறந்தது.

  MORE
  GALLERIES

 • 57

  உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

  முதல் பார்வை : பார்த்த உடனே ஒருவரை பிடித்து விடுவது வெறும் ஈர்ப்பு மட்டுமே. வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்போது நீண்ட காலம் அவர்களுடன் பழகி பார்த்து தேர்வு செய்ய வேண்டும். பார்த்த பார்வையிலேயே ஒருவரை பிடித்து விடுகிறது என்பதற்காக அவரை துணையாக கருத கூடாது. இது பல சிக்கல்களை உருவாக்க கூடும்.

  MORE
  GALLERIES

 • 67

  உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

  டேட்டிங் : ஒருவரை வாழ்க்கை துணையாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல டேட்டிங் உதவுகிறது. ஆனால் டேட்டிங் செய்யும் போது சில முக்கிய வரையறைகளை கடைபிடிக்க வேண்டும். முதல் முறையாக ஒருவரை டேட்டிங் செய்யும்போது உங்களுக்கு சரியாக தோன்றவில்லை என்றால் அவருடன் இரண்டாவது முறையும் டேட்டிங் செல்லுங்கள். ஏனென்றால், சிலருக்கு முதல் முறையில் தன்னை பற்றி வெளிக்காட்ட முடியாது. எனவே இரண்டாவது வாய்ப்பு என்பது நல்ல வழியாகும்.

  MORE
  GALLERIES

 • 77

  உங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய 6 கோல்டன் ரூல்ஸ் இதுதான்..!

  நிராகரிப்பு : வாழ்க்கை துணையை தேடும் பயணத்தில் பல நிராகரிப்புகள் ஏற்பட கூடும். எனவே உங்களை நிராகரிப்பவர்களிடம் மீண்டும் மீண்டும் செல்வதை தவிர்த்து விடுங்கள். இப்படி செல்வது உங்களின் நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும். இதற்கு மாறாக உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லுங்கள். இதை நினைத்து மன அழுத்தம் கொள்ளாதீர்கள். இவரை விடவும் சிறந்த துணை உங்களுக்கு கிடைப்பார் என்று முழு நம்பிக்கை கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES