! பிரச்சனைகள் ஏற்படாத திருமணங்களே கிடையாது. ஆனால் ஒரு சில திருமணங்கள் நிரந்தரமாக பிரியும் அளவுக்கு தீவிரமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. எனவே பிரச்சனையை சரி செய்வது, திருமணத்தை காப்பாற்றுவது என்பது மிக மிக சவாலான விஷயம். கணவன், மனைவி இருவருமே திருமண உறவை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டு செல்வதற்கு பங்களிக்க வேண்டும். இருப்பினும், ஆண்கள் சில நேரங்களில் ஒரு சில விஷயங்களை செய்தால் திருமணத்தை காப்பாற்றி விட முடியும். அவ்வாறு ஆண்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்கள் இங்கே.
வெளிப்படையாக பேசுவது : எல்லா உறவுகளுக்குமே வெளிப்படையாக மனம் விட்டு பேசுவது மிக மிக முக்கியம். குறிப்பாக திருமணத்தில் உறவு நீடிக்க, கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச வேண்டும். தங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளை, எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை தெளிவாக வெளிப்படையாக கூற வேண்டும். அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் இடையே கம்யூனிகேஷன் வலுவாக இருந்தால், உறவு வலுவாகும் மற்றும் நம்பிக்கை வளரும். சரியாக பேசாமல் இருப்பவர்களுக்கு, மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறமுடியவில்லை என்னும் பட்சத்தில் தவறாக புரிந்து கொள்ளக்கூடிய நிலை ஏற்படும் அல்லது அதனால் பிரச்சனைகள் ஏற்படும். மனதில் இருப்பதை கணவன் அல்லது மனைவி கூறும்போது அதை நிதானமாக கேட்கவும் செய்ய வேண்டும். குறை சொன்னாலோ, விமர்சனம் வைத்தாலோ, உடனடியாக அதை எதிர்க்காமல், செய்யாமல் உங்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
அன்பு காட்டுவது மற்றும் பாராட்டுவது : அன்பை காதலை வெளிப்படுத்துவது, அரவணைத்து நடப்பது மற்றும் நன்றி உணர்வுடன் இருப்பது ஆகியவை திருமண உறவை வலுப்படுத்தும. ஆண்கள் தேவையான நேரத்தில் மனைவியை பாராட்டி வெளிப்படையாக அன்பு செலுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் மனைவிக்கு என்ன செய்தால் பிடிக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு நடப்பது அதை செய்து அவர் மீது இருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவேண்டும். இது ஓர் அழகான சூழலை உண்டாக்கி உறவை வலுப்படுத்தும்.
பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் : கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், கருத்து வேறுபாடுகள், சண்டை அல்லது உறவில் பிரச்சனை என்று எதுவாக இருந்தாலும் ஆண்களும் அதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அதை சரிசெய்யும் பொறுப்பு அவர்களுடையதாகும். அதுமட்டுமில்லாமல், ஆண்கள் மீது தவறு இருந்தால் அதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சின்ன சின்ன விஷயங்களை கூட உடனே கவனிக்க வேண்டும் : கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் வருவது இயல்புதான், தவிர்க்கவே முடியாது. ஆனால் சின்ன சின்ன விஷயங்கள் பிரச்சினைகளாக தலை தூக்கும் போதே அதை அலட்சியமாக நினைக்கக் கூடாது. இது சரியாகி விடும், இதெல்லாம் பிரச்சினையே இல்லை என்று நீங்களாகவே முடிவு செய்யாமல் அதை உடனடியாக சரி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனைகள் சிறிதாக இருக்கும் பொழுதே அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து செயல்பட்டால் அதை பெரிய அளவு மாறாமல் தவிர்க்க முடியும். இவ்வாறு சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதே ஒரு பாசிட்டிவான சூழலை உருவாக்கி தம்பதிகளுக்கு நெருக்கத்தை அதிகரிக்கும்.