திருமணத்திற்கு திட்டமிடும் இளம் ஜோடிகள் எதிர்கால வாழ்க்கை குறித்து எண்ணற்ற விஷயங்களை பேசியிருப்பார்கள். ஆனால், இதைப் போய் பேசலாமா என நினைத்து அல்லது யார் முதலில் இதை பேசுவது என்ற தயக்கம் காரணமாக இதுகுறித்து விவாதம் இல்லாமல் போகலாம். எனினும், திருமணத்திற்கு பிறகு அன்பும், அர்ப்பணிப்பும் ஒருசேர கலந்து இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்றால், முன்கூட்டியே நீங்கள் அதுகுறித்து ஆலோசனை செய்து கொள்ள வேண்டும்.
அவர்களது முன்னுரிமை என்னவென்று கேளுங்கள் : உங்கள் வருங்கால கணவர் அல்லது மனைவி கட்டிலில் எதை விரும்புவார், எதை விரும்ப மாட்டார் என தெரிந்து கொள்வது மிக முக்கியம். ஒவ்வொருவருக்கும், சில ஆசைகளும், நீங்கள் இதை தாண்டி செயல்படக் கூடாது என்ற சில வரைமுறைகளும் இருக்கும். அதையெல்லாம் முன்கூட்டியே நீங்கள் கேட்டு தெரிந்து கொண்டால், உங்கள் இணையுடன் நீங்கள் ஒன்று சேரும் சமயத்தில் உதவிகரமாக இருக்கும்.
உங்களுக்கு என்ன விருப்பம் என்பதையும் சொல்லி விடுங்கள் : செக்ஸ் என்பது இருவழிப் பாதை அல்லது ரெட்டை மாட்டு வண்டி போன்றது. இருவரின் செயல்பாடுகளுக்கும் சம உரிமை உண்டு. ஆகவே, உங்கள் மனதில் குடிகொண்டிருக்கும் ஆசைகளை சொல்லி விட வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொசிஷன் எது என்பது குறித்தும், எது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்பது குறித்தும் முன்கூட்டியே பேசிவிட வேண்டும். சுருக்கமாக சொல்வது என்றால் உங்கள் ஆசைகளையும், தேவைகளையும் வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். இதனால், உங்கள் இருவருக்கும் இடையிலான பந்தம் அதிகரிக்கும்.
பிடித்தது எது என்பதை உணருங்கள் : உங்கள் பார்ட்னருக்கு எது பிடிக்கும் என்பதை நீங்கள் மெல்ல, மெல்ல உணர்ந்து கொள்ள வேண்டும். சிலர் அதிக ரொமான்ஸ் வேண்டும் என விரும்பக் கூடும் அல்லது சிலர் மிருகங்களை போன்று அதிக ஈடுபட்டுடன் செயல்பட விரும்புவார்கள். ஆக, இரு தரப்புக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது என்பது குறித்து ஒருமித்த கருத்தை நீங்கள் எட்ட வேண்டும்.
அனுபவங்களை பகிருங்கள் : திருமணத்திற்கு பிறகும் ஆரோக்கியமான விவாதங்கள் அவசியமானது. நீங்கள் உங்கள் பார்டனரை அணுகியபோது அவர்களது ரியாக்ஷன் எப்படி இருந்தது, உங்கள் மனவோட்டம் எப்படி இருந்தது என்பது குறித்து தயக்கமின்றி பேசுங்கள். இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது, எது பிடித்தமானது, எதையெல்லாம் கைவிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரிய வரும்.
அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் : ஒருவரை ஒருவர் பழித்துப் பேசி அல்லது புகார் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. இருவரும் அர்ப்பணிப்புடன் பழக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிறருடைய உணர்வுகளை புண்படுத்தி விடாமல் மிக அன்யோன்யமாக பழகுவது மிக முக்கியமானது. சில சமயம் நீங்கள் யோசிக்காமல் செய்யும் சில விஷயங்கள் உங்கள் துணையை காயப்படுத்தி விடும்.