முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

சிலர் எப்போதுமே காதல் மன்னன் அல்லது காதல் ராணி என்ற நினைப்பிலேயே வலம் வருகின்றனர். ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், வேறொரு நபர்களை சைட் அடிப்பதற்கும், அவர்களை ரொமான்ஸ் உணர்வுடன் அணுகுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை.

  • 110

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    திருமணம் கடந்த உறவு என்பது இன்று, நேற்று முளைத்த பிரச்னை அல்ல. சமூகத்தில் பன்னெடுங்காலமாகவே இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. ஒரு காலத்தில் பெரும் பாவ காரியமாகவும், அறம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்பட்ட இந்த உறவானது, இன்றைக்கு மிக சாதாரணமாக கடந்து செல்லும் நிலைக்கு வந்திருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 210

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    தம்பதியர்களுக்கு இடையே கருத்தொற்றுமை இல்லை என்ற சூழலிலும், மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற சூழலிலும் அவர்கள் முறைப்படி விவகாரத்து பெற்று, புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் நம் இந்திய சட்டங்களில் உள்ளன. சமூகமும் இதை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால், திருமண வாழ்க்கையில் எந்தவித பிரச்னையும் இல்லாதபோதே கூடுதல் சபலத்தின் காரணமாக வேறொரு உறவை வளர்த்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 310

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    அதிலும் இன்றைக்கு  சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் ஆப் போன்றவை பெருகியுள்ள நிலையில், ஜொள்ளு வடிய சாட்டிங் செய்யும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருமணம் கடந்த உறவை பலரும் விரும்புவதற்கு என்ன காரணம் என்பது குறித்து கிளீடன் என்ற டேட்டிங் ஆப் ஆய்வு நடத்தியது.

    MORE
    GALLERIES

  • 410

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    இதில், 25 முதல் 50 வயதுக்கு உட்பட்ட திருமணமான நபர்கள் 1,500 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதில், 82 சதவீதம் பேர் ஒற்றை துணையுடன் வாழ்க்கையை நேர்மையாக வாழுவது சாத்தியம் என்று பதில் அளித்துள்ளனர். அதே சமயம், 44 சதவீதம் பேர் ஒரே சமயத்தில் இருவருடன் வாழ்க்கை நடத்தினாலும் மகிழ்ச்சி குறையாது என்று கூறியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 510

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    தங்கள் வாழ்க்கை துணையை தாண்டி வேறொரு துணையுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று 55 சதவீதம் பேர் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபோன்று மனம் அலைபாய என்ன காரணம் என்பதை இப்போது பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 610

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    கவன ஈர்ப்பு : திருமண வாழ்க்கையில் தம்பதியர் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு, ஒருவர் ஆறுதலாகவும், அக்கறையாகவும் இருக்க வேண்டும். அத்துடன் உடல் ரீதியிலான நெருக்கமும் அவசியமாகிறது. ஆனால், இந்த விஷயங்களில் தன்னுடைய பார்ட்னர் தன்னை புறக்கணிப்பதாக நினைக்கின்றபோது, அவை கிடைக்கும் இடங்களில் அவர்கள் மனதை பறி கொடுக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 710

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    பழிக்குப் பழி : உங்கள் பார்ட்னர் நம்பிக்கையற்றவராக தோன்றும்போது, நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணருவது வழக்கம் தான். ஆனால், பார்ட்னரிடன் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கையை தனக்கான நியாயமாக எடுத்துக் கொண்டு, தானும் அதேபோல வேறொரு பந்தம் ஏற்படுத்திக் கொள்வதை சரி என்று பலரும் கருதுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 810

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    திருப்தியற்ற வாழ்க்கை : திருமண வாழ்க்கையில் சுமார் 32 சதவீதம் பேருக்கு பாலியல் வாழ்க்கையில் முழுமையான திருப்தி கிடைப்பதில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தம்பதியர்களுக்குள் இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. இதனால், மூன்றாம் நபர் எளிதாக இந்த வட்டத்திற்குள் நுழைந்து விடுகிறார்.

    MORE
    GALLERIES

  • 910

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    புதிய ரொமான்ஸ் : சிலர் எப்போதுமே காதல் மன்னன் அல்லது காதல் ராணி என்ற நினைப்பிலேயே வலம் வருகின்றனர். ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், வேறொரு நபர்களை சைட் அடிப்பதற்கும், அவர்களை ரொமான்ஸ் உணர்வுடன் அணுகுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. கொண்டாட்டம், குதூகலம் ஆகிய இரண்டும் தான் இவர்களது நோக்கமாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 1010

    இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் என்ன...? ஆய்வில் வெளிவந்த தகவல்..!

    அழகின் மீது கர்வம் : தான் ஒரு பேரழகனாக அல்லது பேரழகியாக இருக்கிறோம் என்ற சிந்தனை சிலருக்கு இருக்கிறது. இப்படியொரு அழகில் இருக்கும் தன்னை வேறொருவர் ரசிப்பதும், அவர்களுடன் உடல் தேவைகளை பகிர்ந்து கொள்வதும் மிக இயல்பானது எனக் கருதுகின்றனர். குறிப்பாக, மற்றவர்களை பாலியல் ரீதியாக தூண்டுவதை இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செய்கின்றனர்.

    MORE
    GALLERIES