அதே போல நாம் காணும் செக்ஸ் கனவுகள் பொதுவாக நமது பாலியல் கற்பனைகளை நிறைவேற்றி கொள்வதாக இருக்கும். ஹார்மோன்கள், ஆசைகள் மற்றும் பாலியல் தேவைகள் நமக்கு இருப்பதால் செக்ஸ் கனவுகள் வருகின்றன என்றாலும் அவை சில நேரங்களில் ஆழமான அர்த்தத்தையும் கொண்டிருக்கலாம். அந்த வகையில் மிகவும் பொதுவான சில செக்ஸ் கனவுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள் இங்கே...
முன்னாள் பார்ட்னருடன் செக்ஸ் : ஒரு ரிலேஷன்ஷிப்பை விட்டு பிரிந்த பெரும்பாலானோருக்கு வரும் மிகவும் பொதுவான செக்ஸ் கனவுகளில் ஒன்று முன்னாள் காதலன் / காதலி அல்லது முன்னாள் லைஃப் பார்ட்னருடன் செக்ஸ் வைத்து கொள்வது போன்ற கனவு. இப்படி கனவு வந்தால் கனவு காண்பவருக்கும் - எக்ஸ்-க்கும் இடையேயான விஷயங்கள் இன்னும் சரியாக முடிவடையவில்லை என்பதை குறிக்கிறது. முன்னாள் பார்ட்னருடன் மனதளவில் உறவை முற்றிலும் முறித்து கொள்ளாமல் இருப்பதால் இத்தகைய கனவுகள் வருகின்றன. செக்ஸ் என்பது நெருக்கத்தின் மிக உயர்ந்த வடிவம் என்று நம்பப்படுகிறது. உங்கள் முன்னாள் துணையை பற்றி நீங்கள் இப்படி கனவு கண்டால் நீங்கள் இன்னும் அவரை மறக்கவில்லை என்பதை குறிக்கிறது.
அந்நியருடன் செக்ஸ் : அறிமுகமில்லாத நபருடன் உடலுறவு கொள்வது பற்றி கனவு கண்டால், அது உங்கள் பெயர் தெரியாத அன்பை குறிக்கிறது. அதே நேரம் அந்நியருடன் உடலுறவு பற்றி கனவு காண்பது ஆரோக்கியமான லிபிடோ மற்றும் சாதாரண பாலியல் தூண்டுதலின் அடையாளமாகவும் இருக்கலாம். தெரியாதவற்றை ஆராய வேண்டும் என்ற ஆசைதான் நிறைய பேருக்குத் திருப்பமாக செயல்படுகிறது. ஒருவேளை நீங்கள் பொதுவில் அந்நியர் ஒருவரால் ஈர்க்கப்பட்டால், உங்கள் தூக்கத்தில் இதுபோன்ற கனவுகள் மிகவும் பொதுவானதாக இருக்கும்.
தெரிந்தவருடன் செக்ஸ் : நம்முடைய வாழ்வில் நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றும் சக ஊழியர்கள் என பலரும் நமக்கு நன்கு அறிமுகமானவர்களாக உள்ளனர். ஆனால் நமக்கு தோன்றும் பாலியல் ஆசைகளை பற்றி வெளிப்படையாக பேச நாம் தயங்குகிறோம் அல்லது பயப்படுகிறோம், எனவே அதை பற்றி நாம் கனவாக காண்கிறோம். உங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவருடன் உடலுறவு வைத்து கொள்வது போல கனவு காண்பது, அந்த நபரிடம் நீங்கள் பாலியல் ரீதியாக அல்லது அன்பான விதத்தில் ஃபீலிங்ஸை மனதில் வளர்த்துள்ளீர்கள் என்பதைக் குறிக்கிறது.
பிரபலங்களுடன் செக்ஸ் : மிகவும் வெளிப்படையான மற்றும் பொதுவான பாலியல் கனவுகளில் பிரபலங்களுடன் செக்ஸ் வைத்து கொள்வது போன்ற கனவுகள் அடங்கும். செலிபிரிட்டிகளின் கவர்ச்சி, அழகான உடலமைப்பு மற்றும் அவர்களின் சிறப்பான தோற்றம் உள்ளிட்டவை அவர்கள் மீது நமது மறைந்திருக்கும் பாலியல் ஆசைகளை தூண்டுகின்றன. நீங்கள் அடிக்கடி உடலுறவு கொள்வதாக கனவு காணும் செலிபிரிட்டி டைப், நீங்கள் விரும்பும் நபர்களின் வகையை பற்றி சொல்கிறது. உங்கள் மனநிலைக்கு ஏற்பவும் இது மாறுபடலாம்.