அன்புக்கு எல்லை இல்லை என்று கூறுவதுண்டு. அதில் கொஞ்சம் பொசசிவ்னெஸ் இருப்பது உண்மையிலேயே அழகு தான். ஆனால், அதீதமான அன்பும் ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். காதலர்கள், திருமணமான தம்பதிகள், ஏன் லிவ்-இன் தம்பதிகள் கூட பொசசிவ்னெஸ் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னுடைய காதலன்/காதலி அல்லது வாழ்க்கைத்துணை தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறே இல்லை. ஆனால், பொசசிவ்னெஸ் அதிகமாகி, அது உணர்வு ரீதியாக மிகப்பெரிய பிரச்சனையாக மாறலாம்.
உங்கள் துணைக்கு உறுதி அளியுங்கள் : உங்கள் பார்ட்னர் பொசசிவ்வாக இருந்தால், கோபத்தில் சண்டை போடாமல், விவாதம் செய்யாமல் நிதானமாக உங்கள் பார்ட்னருடன் உரையாடுங்கள். உறவில் பாதுகாப்பின்மை, அல்லது தனக்கு முக்கியத்துவம் இல்லை என்ற உணர்வு, ஆகியவை தான் பொசசிவ்னெஸ் ஏற்பட காரணமாக இருக்கின்றது. எனவே, உங்கள் உறவில் என்ன பிரச்சனை இருக்கிறது, எதெல்லாம் உங்கள் பார்ட்னருக்கு அசௌகரியமாக இருக்கிறது என்று மனம் விட்டு பேசுங்கள். எரிச்சல் அடையாமல், கொஞ்சம் முதிர்ச்சியுடன் அணுகுங்கள்.
Couple தெரபிக்கு செல்லுங்கள் : சில நேரங்களில் உங்கள் இருவருக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது, அல்லது எவையெல்லாம் பிரச்சனை என்று சரியாக கண்டறிய முடியாத சூழலில், நீங்கள் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அல்லது couple தெரபிக்கு செல்லலாம். உங்களுக்கே தெரியாமல் மனதில் புதைந்திருக்கும் பிரச்சனைகள் பற்றி நீங்கள் வெளிப்படுத்தலாம்.
தேவையில்லாத சந்தேகம் உருவாகும் சூழலை ஏற்படுத்தாதீர்கள் :
உறவில் சந்தேகம் மற்றும் பொறாமை ஏற்படக்கூடாது. எனவே, உங்கள் பார்ட்னர் பொசசிவ்வாக இருந்தால், சந்தேகம் ஏற்படக்கூடிய சூழலை உண்டாக்காதீர்கள். சந்தேகம் தானாக ஏற்பட்டாலும், உங்களால் தீர்வு காண முடிந்தால் சரி. இல்லையென்றால், உங்களால் சரியான விளக்கம் கொடுக்க முடியாத சந்தேகமான சூழலை எப்போதும் உண்டாக்காதீர்கள். மேலும், சந்தேகத்தை தவிர்க்க, சின்ன சின்ன விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உங்கள் பார்ட்னர் நிம்மதியாக, பிரிவு ஏற்படாது என்று உறுதியாக தோன்ற வேண்டும். ஆனால், இதற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.