ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

உடலுறவின் போது எல்லோருமே சிறந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், அதாவது கட்டிலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

 • 18

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

  கணவன் மனைவிக்கு இடையேயான உடலுறவை வெறுமனே பாலுணர்ச்சியின் கீழ் பட்டியலிட்டு விட முடியாது; பட்டியலிடவும் கூடாது. எமோஷனல் ஆகவும், பிஸிக்கல் ஆகவும் உடலுறவு, ஒருவருக்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஒரு நல்ல உடலுறவு - மகிழ்ச்சி, குறைந்த மன அழுத்தம், நம்மை பற்றிய நமக்கான புரிதல், வாழ்க்கை துணை உடனான நெருக்கம் போன்ற 'எமோஷனல்' நன்மைகளையும், இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாடு, குறைந்த இரத்த அழுத்தம் போன்ற 'பிஸிக்கல்' நன்மைகளையும் உறுதி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உடலுறவு, குறைந்த விவாகரத்து விகிதத்திற்கும் வழிவகுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 28

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

  இப்படியான உடலுறவின் போது எல்லோருமே சிறந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், அதாவது கட்டிலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும்போது, கடந்த முறையை விட மேலதிக உச்சங்களை எட்ட விரும்புகிறார்கள். அதற்காக தங்களால் ஆன எல்லாவற்றையும் படுக்கையறையில் முயற்சி செய்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

  ஏனெனில் அதே பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வது ஒருகட்டத்தில் சலிப்பு தட்டிவிடும். குறிப்பாக, செக்ஸ் என்றாலே அது 'மிஷனரி பொசிஷன்' மட்டுமே என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அதையே செய்தும் கொண்டிருந்தால், உங்கள் கட்டிலுக்கு கூட உங்களை பிடிக்காது!

  MORE
  GALLERIES

 • 48

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

  இந்த இடத்தில் நீங்கள் 'ரோல்-பிளே' அல்லது புதிய செக்ஸ் பொசிஷன்களை முயற்சித்து, உங்கள் செக்ஸ் லைஃப்-ஐ இன்னும் சுவாரஸ்யமாக்க முடியும் என்றாலும் கூட, உடலுறவின் போது உங்கள் துணையை மட்டுமல்ல உங்களையே கூட ஆச்சரியப்படுத்தும் சில செக்ஸ் டிப்ஸ்களை அறிந்து கொண்டால்.. அடுத்த லெவலுக்கு போக முடியும்; டி20 மேட்ச் ஆக இருந்தாலும் சரி.. டெஸ்ட் மேட்ச் ஆக இருகாலும் சரி... அவுட் ஆகாமல் சும்மா நின்று விளையாட முடியும்!

  MORE
  GALLERIES

 • 58

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

  அதற்கு... முதலில் எது உங்களை ஆன் மற்றும் ஆஃப் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் : உங்கள் உடல் எதை விரும்புகிறது மற்றும் எதை விரும்பாது என்பதைப் புரிந்துகொள்வது, படுக்கை அறையில் சிறப்பாக செயல்படுத்தற்கான முதல் படியாகும். உங்கள் துணை உங்கள் மீது கட்டவிழ்த்துவிடும் ஒரு குறிப்பிட்ட செயலை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் சங்கடமாக உணர்வீர்கள், இதனால் உங்களால் உடலுறவை அனுபவிக்க முடியாது. அதுவே உங்களுக்கு பிடித்த "வேலைகள்" நடக்கிறது என்றால் நீங்கள் திருப்தி அடைவீர்கள். இதுசார்ந்த புரிதலை பெற மனம்விட்டு கருத்துக்களை பகிர்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 68

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!


  தன்னிச்சையாக செயல்பட கூடாது; சேர்ந்து செயல்பட வேண்டும் : வித்தியாசமான மற்றும் சற்றே புதிய முயற்சிகளை கட்டிலில் செய்து பார்க்க ஒருபோதும் தயங்க வேண்டாம். அதற்கு முன் அதை பற்றி உங்கள் துணையிடம் பேச வேண்டும். ஏனெனில் பாலியல் ஆசைகள் மற்றும் தேவைகள் என்று வரும் போது இருவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 78

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

  எடுத்தோம்.. கவுத்தோம்.. முடிச்சோம்னு இருக்க கூடாது : உடலுறவு கொள்வதற்கு முன், இருவரின் உணர்வுகளுமே தூண்டப்பட வேண்டும், இருவருமே தயாராக வேண்டும். உங்கள் பாலுணர்ச்சியை தூண்ட நீங்களே உங்களை தொடலாம் அல்லது உங்கள் துணையின் உடலில் உங்கள் விரல்களை வைத்து விளையாடலாம். ஒருகட்டத்தில் உங்கள் துணை காமத்தின் பக்கம் சாய்வார், உங்களையும் உச்சத்திற்கு கொண்டு சேர்ப்பார்.

  MORE
  GALLERIES

 • 88

  உடலுறவில் உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் 4 செக்ஸ் டிப்ஸ்..!

  சிற்றின்ப ஆபாசப்படங்கள் அல்லது நாவல்களின் உதவியை நாடலாம் : இதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்கிற கட்டத்தில் நீங்கள் இருப்பின், சிற்றின்ப ஆபாச படங்களை பார்க்கலாம் அல்லது ஒவ்வொரு செயலையும் விரிவாக விவரிக்கும் நாவல்களை கூட படிக்கலாம். இந்த "காரியத்தில்" நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து செயல்பட்டால் ஒரே நேரத்தில் இருவரும் தூண்டப்படுவீர்கள்; பிறகு வார்த்தைகளுக்கு வேலை இருக்காது!

  MORE
  GALLERIES