நடிகர் நடிகைகள் மீது எல்லோருக்கும் க்ரஷ் இருக்கும். ஆனால் மிக மிக அரிதான சிலருக்கு மட்டுமே தன் கிரஷ்ஷையே திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும். எவ்வளவு பிரபலமாக, செல்வாக்கு நிறைந்தவராக இருந்தாலும், இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், அந்த வாய்ப்பைப் பெற்றவர்களில் ஆலியா பட்டும் ஒருவர்.
ஆலியா பட் ஹிந்தி திரையுலகில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன போது, தனக்கு நடிகர் ரன்பீர் கபூர் மீது மிகப்பெரிய கிரஷ் இருக்கிறது என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ரன்பீர் அப்போது வேறு நடிகையை காதலித்துக் கொண்டிருந்தார். அதன் பின்பு பிரேக் அப் ஆகி, ஆலியாவைக் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆலியாபட் பல இடங்களில் ரன்பீர் மீது இருக்கும் காதலை வெளிப்படையாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவர்களுக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. தன்னுடைய காதல் கணவன் தான் மிகச்சிறந்த காதலன் என்று ரன்பீர் பற்றி ஆலியா பட் என்ன கூறினார் என்று பார்க்கலாம்.
சொல்வதை எல்லாம் தவிர்க்காமல் கேட்க வேண்டும் : பெரும்பாலான பெண்களின் மிகப்பெரிய குறை, ‘நான் சொல்வதை கேட்பதே இல்லை, கவனிப்பதே இல்லை’ என்பது தான். உங்கள் பார்ட்னருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். காதல், கணவன் மனைவி உறவு மட்டுமல்ல. எந்த உறவாக இருந்தாலும், ஒருவர் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று வரும் போது, அதை கவனமாக கேட்க வேண்டும். தன்னுடைய காதலன் ரன்பீருடன், எந்த விஷயத்தைப் பற்றியும், எப்போது வேண்டுமானாலும் பேசலாம், தனக்கு முக்கியத்துவம் அளித்து பேச விரும்புவதைக் கேட்பார் என்று ஆலியா கூறியுள்ளார்.
புரிதல் என்பது உறவின் பாலம் : புரிதல் என்பது ஒரு உறவில் பாலமாக செயல்பட்டு வருகிறது. உங்கள் பார்ட்னர் பற்றி நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது, உறவை பலப்படுத்தும். அதுமட்டுமின்றி உங்கள் பார்ட்னருக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை உங்களால் எளிமையாக தீர்க்க முடியும். எனவே காதலர்கள் அல்லது கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் மிகவும் அவசியமானது. தற்போதைய நவீன உலகில் இறக்கை கட்டிக் கொண்டு எல்லாரும் பறக்காத குறையாக வாழ்ந்து வருகிறோம். ஒருவரோடு ஒருவர் நேரம் செலவிடுவது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த சூழலில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வது உறவை நீடிக்க உதவும். ரன்பீர் மற்றும் ஆலியா, தங்கள் இருவருக்கும் அழகான புரிதல் இருக்கிறது; இந்த புரிதல் தான் உறவை மேலும் மேலும் அழகாக்குகிறது என்று கூறியிருக்கிறார்.
நகைச்சுவை உணர்வு : காதலனோ அல்லது கணவனோ எவ்வளவு அன்பாக பாசமாக இருந்தாலும், புரிதலுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடந்தாலும் நகைச்சுவை உணர்வு தேவை. நகைச்சுவை உணர்வு இருந்தால் பெரிய சிக்கல்களையும் கடினமான சூழல்களையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே காணப்படும். எப்பொழுதுமே உறவு சீரியஸாக இல்லாமல் அவ்வப்போது ஜாலியாக, ஃபன்னாக, ஆரோக்கியமாக இருப்பதற்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அவசியம். சென்ஷுவல் உறவு, அதிக ‘கேர்’ எடுத்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்பும் அதே நேரத்தில் ஆண்களின் நகைச்சுவை உணர்வையும் விரும்புகிறார்கள். அந்த விதத்தில் ஆலியா பட் மிகவும் லக்கி.