இன்றைய நிலையில் காதல் என்பது பலருக்கும் பொழுதுபோக்கான விஷயமாக மாறிவிட்டது. வாழ்க்கை பற்றிய புரிதல் வருவதற்கு முன்பே பலரும் காதலிக்க துவங்கி விடுகின்றனர். அதிலும் எந்த அளவிற்கு வேகமாக காதல் வாழ்க்கையில் நுழைகிறார்களோ அந்த அளவிற்கு உறவில் பல்வேறு உரசல்கள் ஏற்பட்டு விரைவாகவே உறவை முறித்துக் கொள்கிறார்கள்.
ஒருவேளை நீங்கள் புத்திசாலித்தனமாக அந்த அறிகுறிகளை புரிந்து கொண்டு உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து கொள்வீர்கள் என்றால் உறவை நீட்டித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் உங்கள் பார்ட்னர் உங்களை விட்டு விலக முயற்சி செய்வதற்கான முக்கியமான மூன்று காரணங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இல்லாமல் பல்வேறு விஷயங்களை மறைத்தும், அவர்களின் மனம் காயப்படும்படியும் நடந்து கொள்வது ஒருவருக்கு மற்றவரின் மீது உள்ள நம்பகத்தன்மையை வெகுவாக குறைக்கிறது. எனவே உங்களது துணை உங்களை விட்டு விலக முயற்சி செய்வதாக தோன்றினால், மனம் விட்டு பேசி நீங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு உறவை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
தவறான புரிதல் : உறவில் இருக்கும் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாமல் போவது உறவில் விரிசல் ஏற்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஒருவர் மனம் விட்டு பேசும்போது அதனை மற்றொருவர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றும் தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள்.
பொருத்தமின்மை : ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு முழுமையாக தெரியாமல் உடனடியாக காதல் வாழ்க்கையில் ஈடுபடும் பலரும் நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் பொருத்தம் இல்லை என்பதை உணர துவங்குகிறார்கள். வாழ்க்கை இலட்சியமாக இருக்கலாம், குடும்பத்தை பற்றிய எதிர்பார்ப்பாக இருக்கலாம் அல்லது காதல் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பாக இருக்கலாம்.