ராஞ்சியில் உள்ள பூட்டி மோரில் உள்ள ஹோட்டல் ராயல் ரிட்ரீட் ஜோத்பூர் அரண்மனையின் பாணியில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஆடம்பர கொட்டைகளை பிரதிபலிக்கும் அமைப்புகளையே இந்த ஹோட்டல் கொண்டுள்ளது . பட்ஜெட்டில் ராயல் திருமணத்தின் உணர்வை நீங்கள் விரும்பினால், நிச்சயம் இது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
பார்ப்பதற்கு மட்டும் அரச மாளிகை போல் இருப்பதில்லை. அதன் உணவு உபசரிப்புகளும் ராஜஸ்தானின் அரச குடும்பங்களின் உணவு பழக்கங்களை பிரதிபலிக்கின்றன. திருமண நிகழ்வுகளுக்கு நவாபி கபாப், நவாபி ருமாலி ரொட்டி, ஷீர்மல், அவத் ஸ்பெஷல் டம் பிரியாணி, மட்டன் மாலை கோஃப்தா, நவாபி சாகோரி சாட், அவத் ஸ்பெஷல் ஷாஹி பனீர் போன்ற லக்னோவி நவாபி பாணி உணவுகளை பரிமாறுகிறார்கள்.
அது மட்டும் இல்லைங்க... இங்கு தங்கும் விருந்தினர்கள் அரச குடும்பத்தைப் போல நடத்தப்படுகிறார்கள். தங்கும் இடங்கள், திருமணத்தின் ஒவ்வொரு செயல்பாடு நடக்கும் இடங்கள் என்று எல்லாமே அரசகுடும்ப பாணியிலேயே உள்ளது. இங்கு ஆர்கனைஸ் பின்னப்படும் மெஹந்தி, ஹல்தி நிகழ்வு, நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஆடம்பர ராயல் தீம் அடிப்படையிலான தயாரிப்புகளே உள்ளது.