தமிழ் வருடப்பிறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் பெரும்பாலும் ஒரே நாளில் தான் அமையும். இந்த ஆண்டில் (2023) ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு மற்றும் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்த சோழ ஆட்சி காலத்தில், தமிழ் புத்தாண்டு முதன் முதலாக தோன்றியது. இந்த காலத்தில் தான் தமிழ் காலண்டர் உருவாக்கப்பட்டது. அன்று முதல் சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக அனுசரிக்கப்பட்டது.