முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

ஆளுமை பற்றிய பகுப்பாய்வு நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கிடைக்கப் பெற பிற அறிக்கைகளின் அடிப்படையில் இந்த விளக்கம் அமையப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 17

    உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்பட ஏதாவது ஒரு மொபைல் போன் ஒன்று நிச்சயம் இருக்கும். இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த பலவற்றை நீங்கள் கண்டு ரசிப்பீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விஷயங்களைப் பார்ப்பதற்கு ஆர்வம் மற்றும் விருப்பங்கள் அதிகமாக இருக்கும். இதன் மூலம் ஒருவரின் செயல்திறன் எப்படி இருக்கும்? என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் உங்களது மொபைல் போனை எப்படி வைத்திருக்கிறீர்கள்? அதாவது எப்படி கையால் பிடித்துக் கையாள்கிறீர்கள்? என்பதை வைத்து உங்களின் ஆளுமைத்திறன் மற்றும் குணாதிசயங்கள் பற்றி நிறைய சொல்ல முடியும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    MORE
    GALLERIES

  • 27

    உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

    எப்படி என்று நீங்கள் தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, சிறிது நேரம் ஒதுக்கி,உங்களது மொபைல் போனை முதலில் நீங்கள் எப்படி உபயோகிக்கிறீர்கள்? என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் இந்த செய்தியை நீங்கள் படிக்கும் போது  சுவாரஸ்சியமாக இருக்கும். இதோ வாருங்கள் நாமும் தெரிந்துகொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

    ஒரு கையால் பிடித்து அதே கையின் கட்டை விரலால் போனைப் பயன்படுத்துதல் : நம்மில் பலர் மொபைல் போனை ஒரு கையால் பிடித்து அதே கையின் கட்டை விரலால் பிடித்து உபயோகிப்போம். இதுப்போன்று மொபைல் போனைப் பயன்படுத்துபவர்கள் தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கையில் வேகமாக முன்னேற விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் நீங்கள் எவ்வித சவால்கள் வந்தாலும் அதற்கு பயப்பட மாட்டீர்கள். மிகவும் நம்பிக்கையுடன் வாழ்க்கையில் பயணிக்கும் சில தந்திரங்களைச் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். உங்களது பார்டனருடன் வாழ்க்கையை சமாளிக்க வெவ்வேறு வழிகளில் உங்களது உறவுடன் போராட வேண்டியிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 47

    உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

    இரு கைகளால் ஃபோனைப் பிடித்து ஒரு கட்டை விரலைமட்டும் பயன்படுத்துதல்  : உங்களது மொபைல் ஃபோனை இப்படி பயன்படுத்துபவர்கள்,எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன்னதாக அனைத்து அபாயங்களையும் தெரிந்துக்கொள்ள விரும்பும் கவனமாக இருப்பீர்கள் என அர்த்தம். இதோடு நீங்கள் புத்திசாலி, சிந்தனைமிக்கவர் மற்றும் பாவப்பட்ட குணம் கொண்டவராக ( பச்சாதாபம்) இருப்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை என்று வரும் போது, பல பிரச்சனைகளை வந்தாலும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

    இரு கைகளால் ஃபோனைப் பிடித்து, இரு கட்டைவிரல்களையும் பயன்படுத்துதல்  : உங்களது வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்துச் சவால்களையும் ஆற்றலுடன் சந்திக்கும் திறன் மிக்கவராக இருப்பீர்கள். புத்திசாலித்தனமாக அனைவரிடமும் பேசுவீர்கள். இருப்பினும் பொது மற்றும் சமூக விவகாரங்களைக் கையாளும் போது எதையும் அப்பாவித்தனத்துடன் நம்பக்கூடிய தன்மை உள்ளது. காதல் வாழ்க்கை என்று வரும்போது, அப்பாவி இளைஞனைப் போன்ற எண்ணம் உங்களிடம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

    ஒரு கையால் பிடித்து மற்றொரு கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்துதல்  : நீங்கள் இதுப்போன்று உங்களது மொபைல் போனை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்குத் தன்னிச்சையான ஆளுமை மற்றும் சாகச செயல்களை செய்ய விரும்புபவர்களாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் கற்பனையில் ஒரு சாமர்த்தியம் கொண்டவர் மற்றும் படைப்பாற்றல் துறையில் திறம்பட செயல்படுவீர்கள். உங்களது தொழிலை வெற்றிக்கரமாக செய்யக்கூடிய திறன் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    உங்க கேரக்டரை புட்டு புட்டு வைக்கும் மொபைல்..! ஃபோனை இப்படி யூஸ் பண்ணுனா இதான் அர்த்தமாம்..!

    மொபைல் போன்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்? என்பதை வைத்து உங்களின் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமைத்திறன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இது ஆளுமை பற்றிய பகுப்பாய்வு நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கிடைக்கப் பெற பிற அறிக்கைகளின் அடிப்படையில் அமையப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES