முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

குழந்தையின் முகத்தை மறைக்க ஃபோட்டோக்களில் அவர்கள் Emoji-க்களை பயன்படுத்துவது. பிரபலங்கள் ஏன் சோஷியல் மீடியாக்களில் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள்..?

 • 18

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  நீங்கள் விளையாட்டு வீரர் அல்லது திரை பிரபலங்கள் என மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விளங்கும் செலிபிரிட்டியை சோஷியல் மீடியாக்களில் ஃபாலோ செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு குழந்தை அல்லது சிறுகுழந்தை இருந்தால் அடிக்கடி ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். அது என்னவென்றால் குழந்தையின் முகத்தை மறைக்க ஃபோட்டோக்களில் அவர்கள் Emoji-க்களை பயன்படுத்துவது. பிரபலங்கள் ஏன் சோஷியல் மீடியாக்களில் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள்..?

  MORE
  GALLERIES

 • 28

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  கடந்த சில வாரங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியரின் குழந்தையான வாமிகா-வின் ஃபோட்டோ ஆன்லைனில் வைரலானது. எனினும் இந்த இரு பிரபலங்களின் தீவிர ரசிகர்களும் குழந்தை வாமிகாவின் ஃபோட்டோக்களை ஆன்லைனில் இருந்து அகற்ற வலியுறுத்தினர். பிரபலங்களாக இருப்பவர்களின் குழந்தைகளின் முகங்களை காண ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலாக இருப்பது இயல்பு. எனினும் ஏன் பெற்றோர்களாக இருக்கும் பிரபலங்கள் தங்கள் குழந்தையின் முகத்தை பொது மக்களிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதும் இயல்பு.

  MORE
  GALLERIES

 • 38

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  இதற்கு காரணம் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளின் பிரைவஸியை கருத்தில் கொள்கிறார்கள். ஏனென்றால் பொதுவாக சோஷியல் மீடியாவில் இருக்கும் பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களையும் தங்கள் ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்ஸ்களுடன் ஷேர் செய்து கொள்ளும் போது, தங்கள் குழந்தையின் முகத்தை ஹார்ட் அல்லது சைல்ட் எமோஜிக்கள் மூலம் மறைப்பதற்கு காரணம், தங்கள் குழந்தைகளின் நலனுக்காக அவர்களை சுற்றி ஒரு தனியுரிமை வேலி அமைப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  குழந்தை வாமிகாவின் ஃபோட்டோ ஆன்லைனில் லீக் ஆவதற்கு முன்பு தங்கள் குழந்தையின் ஃபோட்டோவை பப்ளிஷ் செய்யாமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கு அனுஸ்கா நன்றி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முன்பு இன்ஸ்டாவில் கூறியிருந்த அனுஷ்கா சர்மா, நாங்கள் எங்கள் குழந்தைக்கு பிரைவஸி இருக்க வேண்டும் என நினைக்கிறோம். மேலும் மீடியா மற்றும் சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை அவள் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். எனவே உங்கள் ஆதரவு தேவை எனவே இந்த விஷயத்தில் அனைவரும் நிதானத்தை கடைபிடிக்க கோருகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 58

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  ஆலியா & ரன்பீர்: சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஆலியா & ரன்பீர் ஜோடி சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது தங்களது குழந்தை Raha-விற்காக "நோ ஃபோட்டோ பாலிசி"-யை கடைபிடிக்க கோரினர். எங்கள் குழந்தையை தயவு செய்து ஃபோட்டோ கிளிக் செய்ய வேண்டாம். ஒருவேளை தவறுதலாக ஏதேனும் ஃபிரேமில் குழந்தை கிளிக் செய்யப்பட்டிருந்தால் கூட, அதை நீங்கள் பப்ளிஷ் செய்தால் குழந்தையின் முகத்தை மறைக்க ஹார்ட் எமோஜி போன்ற எமோஜிக்களை பயன்படுத்துங்கள் என்றனர். ரன்பீர் பேசுகையில் நீங்கள் எங்களை கிளிக் செய்தால் நான் எதிர்க்க மாட்டேன். ஆனால் என் குழந்தை வளர்ந்து பிறர் போட்டோ எடுப்பது அவளுக்கு ஓகேவா இல்லையா என்பதை அவள் புரிந்து கொண்டு செயல்படும் வரை எங்களது நிலைமை இது தான். எனவே எனது குழந்தையின் முகத்தை வெளிப்படுத்தாதீர்கள் என்று கேட்டு கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 68

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  சோனம் மற்றும் ஆனந்த்: கடந்த ஆகஸ்ட்டில் நடிகை சோனம் கபூர் தனது மகனை பெற்றெடுத்தார். மகன் Vayu-வின் முகத்தை சோனம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. தனது மகனின் முகத்துடன் கூடிய ஃபோட்டோவை சோஷியல் மீடியாக்களில் எப்போது ஷேர் செய்வது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த நடிகை சோனம் கபூர், மகன் வளரும் வரை நாம் அதை பற்றி யோசிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் அவரது முகத்தை வெளியிடுவது பற்றி அவரே தீர்மானிக்கும் வரை நான் அதை பற்றி யோசிக்க போவதில்லை என்றார்.

  MORE
  GALLERIES

 • 78

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  பிரியங்கா சோப்ரா & நிக்: பிற பிரபலங்களை போலவே இந்த தம்பதியினரும் தங்கள் குழந்தையின் முகத்தை ஃபோட்டோவில் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். குழந்தையுடன் என்ஜாய் செய்யும் ஃபோட்டோவை ஷேர் செய்தாலும், அதன் முகத்தை ஹார்டின் எமோஜி உள்ளிட்ட சிறந்த எமோஜிக்களை வைத்து மறைத்து தான் ஷேர் செய்கிறார்கள். இதற்கு ஒரு இன்ஸ்டா யூஸர், உங்கள் குழந்தையின் முகத்தை காட்ட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்ட பிறகு எதற்கு குழந்தை இருக்கும் ஃபோட்டோவை மற்றும் ஷேர் செய்கிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 88

  சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஏன் தங்கள் குழந்தைகளின் முகத்தை மறைக்கிறார்கள் தெரியுமா.?

  நேஹா & அங்கத்: பிரபலங்களான நேஹா துபியா மற்றும் அங்கத் ஆகியோர் தங்கள் இரு குழந்தைகளின் முகங்களை சோஷியல் மீடியாக்களில் வெளிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனினும் கடந்த ஜூலை 2022-ல், மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்பட்டதன் 20 ஆண்டுகளை கொண்டாடும் நிகழ்வில் மேடையில் நேஹா தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருந்தார். எனினும் சோஷியல் மீடியாக்களில் அவர்களின் முகத்தை வெளிப்படுத்துவது பற்றி கருத்து தெரிவித்த நேஹா, அவர்களை மறைத்து வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற கட்டத்தில் இன்னும் நான் இருக்கிறேன். எனினும் மேடையில் இது எனக்கு மிகவும் முக்கியமான சிறப்பு தருணம். எனது குழந்தைகள் அவர்களாக விரும்பும் போது சோஷியல் மீடியாக்களில் தங்கள் முகத்தை வெளிப்படுத்தி கொள்ளட்டும் என்றார்.

  MORE
  GALLERIES