இன்னும் சொல்ல போனால் இவை பல விஷயங்களில் நம் மனம் ஈடுபடுவதை வெகுவாக குறைத்துவிட்டன. ஆன்லைனில் இருக்கும் மில்லியன் கணக்கான வீடியோக்கள் மற்றும் கன்டென்ட்ஸ்களுக்கான அணுகல் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கைக்குழந்தை பருவத்திலிருந்து மாறி தவழ துவங்கும் குழந்தைகளின் கைகளில் கூட இப்போது ஸ்மார்ட் ஃபோன்களை நம்மால் பார்க்க முடிகிறது.
பில்கேட்ஸ் குழந்தைகள்: உலகின் மிகபெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் 14 வயது வரை தனது குழந்தைகள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதிக்கவில்லை. தவிர பில்கேட்ஸ் தனது குழந்தைகள் டின்னர் டேபிளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடைசெய்து அவர்களுக்கான ஸ்க்ரீன் டைம் செட் செய்திருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஸ்க்ரீன் டைம் செட் செய்கிறோம். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மொபைல், டிவி, கம்ப்யூட்டர் என டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இந்த பழக்கம் எனது குழந்தைகள் சரியான நேரத்தில் படுக்கைக்கு செல்ல உதவுகிறது என பில்கேட்ஸ் பேட்டி ஒன்றின் போது கூறி இருக்கிறார்.
உங்கள் குழந்தைக்கு 10 - 12 வயதா.? உங்களது குழந்தைக்கு 10 முதல் 12 வயது இருக்கும் போது, நீங்கள் அவர்கள் முதன் முதலில் பயன்படுத்த ஒரு ஸ்மார்ட் ஃபோனை கிஃப்ட்டாக கொடுக்கலாம். இது குறித்து பேசி இருக்கும் லைசென்ஸ்டு கிளினிக்கல் ஒர்க்கரும், First Phone என்ற கட்டுரையின் ஆசிரியருமான கேத்தரின் பேர்ல்மேன், 10 முதல் 12 வயது என்பது ஒரு சிறந்த வயது வரம்பு. ஏனெனில் இந்த வயதில் குழந்தைகள் பெற்றோருடன் மிகவும் இணைந்திருக்கிறார்கள் என்கிறார். குழந்தைகள் கம்யூனிகேஷன்களை புரிந்து கொள்ள தொடங்கும் நேரம் தான், அவர்களுக்கு கம்யூனிகேஷன் கேஜெட் அறிமுகப்படுத்த சரியான நேரம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வறிக்கை : Pew Research Center-ன் சர்வேபடி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 95% டீனேஜ் குழந்தைகள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். 2022-ல் நடத்தப்பட்ட சர்வேயின் இந்த டேட்டா, 2014-2015 அறிக்கையை விட அதிக டீனேஜ் குழந்தைகள் மொபைல் பயன்படுத்தி வருவதை காட்டுகிறது. மேலும் 13 - 14 வயதுடையவர்களை விட 15 -17 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்மார்ட் போன்களை அதிகம் அணுகுவதையும் சர்வே கண்டறிந்துள்ளது.
டீன் ஏஜ் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் மொபைல் பயன்பாடு : கடந்த 2014-2015-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வை ஒப்பிடும் போது டீனேஜர்ஸ் இடையே ஸ்மார்ட் ஃபோன் அணுகல் கடந்த 8 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதை Pew Research Center-ன் சர்வே கண்டறிந்துள்ளது. முந்தைய ஆய்வில் சுமார் 73% டீனேஜர்ஸிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 95%-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்ஸ் அல்லது கேமிங் கன்சோல்களுக்கான அணுகல் பெரிதாக மாறாமல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் வைத்திருக்கும் டீன் ஏஜ் குழந்தைகளின் எண்ணிக்கை 2014 மற்றும் 2022 முறையே 87% மற்றும் 90%-ஆக இருந்தது. 13 முதல் 17 வயதுடைய அமெரிக்க டீனேஜர்ஸ்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உங்கள் கடமை... கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த போது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுமார் 2 ஆண்டுகள் மாணவர்கள் ஆன்லைன் கிளாசில் கல்வி கற்க நேரந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் ஸ்மார்ட் ஃபோன்கள் குழந்தைகளின் கல்வியை தொடர உதவின. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட் போன் வைத்திருப்பதது அவ்வளவு அவசியமில்லை ஆனால் டீனேஜருக்கு மொபைல் அவசியமாகிறது. எனவே உங்கள் டீனேஜ் குழந்தைகள் ஆபத்தில் சிக்காமல் இருக்க அவர்கள் மொபைல் பயன்படுத்துவதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். தவிர ஸ்கிரீன் டைம் லிமிட், அவர்களின் பிரவுசிங் ஹிஸ்ட்ரியை செக் செய்வது உங்களது முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும்.