குழந்தை பிறந்தது முதல் நன்றாக விவரம் தெரியும் வரை அதை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. அதிலும் சிறு குழந்தைகளை கவனித்து கொள்வது என்பது 24/7 சேவை வழங்கும் பணி போன்றதே. நாம் உறங்கும் போதும் சரி குழந்தைகள் உறங்கும் போதும் சரி, 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா போல குழந்தைகளை கண்காணித்து கொண்டே தான் இருக்க வேண்டும்.
குழந்தைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது பெற்றோர்கள் மற்றும் சுற்றியிருக்கும் உறவினர்களுக்கு மிகவும் சவாலான பணியாகும். புதிதாக பிறந்துள்ள குழந்தைகளை அடிக்கடி தூக்கி வைத்து பார்த்து கொள்ள முடியாது என்ற போதிலும், கைக்குழந்தை படுத்தபடியே இருந்தாலும் அதை கண்காணிக்காமல் அப்படியே விட்டு விட முடியாது.
பிறந்த குழந்தையாக இருந்தாலும் கைகள் மற்றும் கால்களை உதைத்து விளையாடுவது அல்லது அழுவது போன்ற பழக்கம் அதற்கு இருக்கும் என்பதால் மெத்தை போன்ற படுக்கையில் இருந்து திரும்பி கீழே விழுந்து விடும் அபாயம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் எந்நேரமும் கண்காணித்து கொண்டே இருந்தாலும் அவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறினாலோ அல்லது டயர்டில் கண் அசரும் போது குழந்தைகளுக்கு சில ஆபத்துகள் நேரிடும் சூழல் உண்டாகிறது. இதை எவ்வாறு தவிர்க்கலாம்? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
என்ன செய்ய வேண்டும்.? : குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக பாட்டிலை எடுக்க 2 அல்லது 3 வினாடி திரும்பும் சமயத்தில், டக்கென்று குழந்தை தவறி கீழே விழ கூடும். இது கைகுழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும் ஆபத்து அல்ல, கட்டில் அல்லது உயரமான நாற்காலி, ஸ்டூல் உள்ளிட்டவற்றில் ஏறி அதிலிருந்து தவறி கீழே விழும் 5 வயது குழந்தைகள் கூட இருக்கின்றன.