கொரோனா பெருந்தொற்று காலம் பெரியவர்களை மட்டுமல்லாமல் சிறியவர்களையும் வெகுவாகப் பாதித்தது. குறிப்பாக, சிறுவர், சிறுமியர்களுக்கான கொரோனா தடுப்பூசி கண்டறியப்படவில்லை என்ற சூழலில் நிலைமை இன்னும் மோசமாக்கியது. எனினும், இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
பெருந்தொற்று காலம் காரணமாக நோய் எதிர்ப்புத் திறன் பாதிப்பு :பெருந்தொற்று காலத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதலால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், எந்தவித விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியும் இல்லாமல் குழந்தைகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியிருந்த காரணத்தால் அவர்களது நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்டது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இயக்கமற்ற வாழ்வியல் பழக்கம் :பெரியவர்கள் என்றாலும், சிறியவர்கள் என்றாலும் எந்தவித உடல் இயக்கமும் இல்லாமல் பெரும்பாலான நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். உடல் பருமன் அதிகரித்தல், நீண்ட கால நோய்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளை இது ஏற்படுத்தும். கொரோனா காலத்தில் 70 சதவீத குழந்தைகளின் தினசரி உடல் இயக்கம் வெறும் 15 நிமிடங்களுக்கு தான் இருந்தது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
முறையற்ற தூக்கம் :கொரோனா காலத்தில் குழந்தைகளின் வாடிக்கையான தூக்க பழக்கம் வெகுவாக மாறிவிட்டது. சரியான நேரத்தில் முறையாக தூங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். உடல் அலர்ஜிகளை தடுக்க இது உதவிகரமாக இருக்கும். ஆனால், இதற்கு மாறாக முறையற்ற தூக்கம் இல்லை என்றால், அதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.
பெற்றோர் எப்படி உதவி செய்யலாம் : பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சராசரியாக ஓராண்டுக்கு 5 முதல் 6 முறை சளி, ஜலதோஷ தொந்தரவு ஏற்படும். ஆகவே, ஜலதோஷ அறிகுறிகள் தென்பட்டால் பதற்றம் அடைய வேண்டாம். எனினும், குழந்தைகளுக்கு மிக தீவிரமான அறிகுறிகள் தென்பட்டால், அது நீர் சார்ந்த நோய்களாக இருக்கலாம். ஆகவே, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். ஆரோக்கியமான பழக்க, வழக்கங்களை குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொல்லி கொடுக்க வேண்டும். அப்போது தான் பள்ளியில் அதை அவர்கள் பின்பற்றுவார்கள். குறிப்பாக, கைகளை முறையாக கழுவுவது குறித்தும், அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும்.