அறிகுறிகள் எப்படி இருக்கும் : காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி,வயிற்றுப்போக்கு, கழுத்து வலி, சொறி,வாய்ப்புண், கை,கால் வீக்கம், கழுத்தில் நெறி கட்டுதல், சிவந்த கண்கள், அதிக சோர்வாக உணர்வது இப்படியான அறிகுறிகளை குழந்தைகளிடம் கண்டால் உடனே மருத்துவரை தொலைபேசியில் அணுகி ஆலோசனை பெற்றுக்கொண்டு பின் மருத்துவமனை கொண்டு செல்வது நல்லது.
MIS-C க்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஒருவேளை MIS-C -யால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள். COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது COVID-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கத்தில் இருந்திருக்கலாம் என கருதுகின்றனர். MIS-C தீவிரமானது, ஆபத்தானதும் கூட, ஆனாலும் பயப்பட வேண்டாம், MIS-C கண்டறியப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மருத்துவ கவனிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.