டீனேஜ் அதாவது பதின்ம வயது என்பது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் சவாலான காலக்கட்டம். .ஆம் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும் பருவம் பதின்ம வயது என்பதால் பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் என்ன? டீனேஜ் பிள்ளைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் தங்கள் பெற்றோர்களோடு முரண்படுவார்கள். இந்நேரத்தில் பெற்றோர்கள் தங்களின் கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதோடு நன்றாக படி, நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். தேவையில்லாமல் விளையாட்டுகள் வேண்டாம், மொபைல் போனைப் பயன்படுத்தாதே .. என்பது போன்ற பேச்சுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் உங்களது மகனோ? மகளோ? தேவையில்லாத பழக்கத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் பல சமூகப் பிரச்சனைகளும் அவர்கள் சந்திக்க நேரிடும். எனவே இந்த சூழலில் உங்களது டீனேஜ் குழந்தைகளை எப்படி சமாளிக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
டீனேஜ் பசங்களை வழிநடத்தும் முறைகள் : அன்பாக இருத்தல் :
பிறந்தவுடன் சில வயது வரை குழந்தைகள் தான் நமக்கு மிகப்பெரிய உலகமாக இருப்பார்கள் .ஆனால் டீனேஜ் வயதில் தன்னுடைய குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதிப்போம். இதனால் சில குழந்தைகள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு குழந்தைகள் தவறுகளை செய்ய நேரிடும். எனவே எப்போதும் கோபத்தை அவர்களிடம் காட்ட வேண்டும். அன்பு, பாசம், அக்கறையை வெளிப்படையாக காட்டுங்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடிப்பது, அவர்களின் செயல்களைப் பாராட்டுவது மற்றும் சாதனைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பிரச்சனைகளுக்குத் தோள் கொடுத்தல் : வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் என்று யாரும் இல்லை. அதிலும் டீனேஜில் சொல்லவே வேண்டாம் பல பிரச்சனைகளை உங்களது மகளோ? மகனோ? சந்திக்க நேரிடும். எனவே அந்நேரத்தில் கோபமடையாமல், என்ன பிரச்சனை? என கேட்க வேண்டும். பிரச்சனைகள் எதுவும் இருந்தால் அவர்களுக்கு கைக்கொடுத்து தூக்கிவிடவும்.
நேரம் செலவிடுதல் : குழந்தைகள் என்றாலே எப்போதும் சந்தோஷமாக மற்றும் சுதந்திரமாக இருக்கத் தான் விரும்புவார்கள். டீனேஜ் வயதில் இதை அதிகமான அனுவிக்க விரும்புவார்கள். இச்சூழலில் அவர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட வேண்டும். எந்த யோசனையும், பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றால் குழந்தைகளுடன் ஒவ்வொரு பெற்றோர்களும் நேரத்தை செலவிட வேண்டும். இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.
உண்மையாக இருத்தல் : பொதுவாக டீனேஜ் வயதில் பெரும்பாலான பசங்கள் சொல்லும் வார்த்தைகளில் ஒன்று.. “எங்க அப்பாக்கு என் மேல அக்கறையே இல்லை“ என்பது தான். முதலில் இந்த மனநிலையை மாற்றுவதற்கு நீங்கள் முயல வேண்டும். எனவே இதுப்போன்ற மனநிலையில் உள்ள உங்களது குழந்தைகளிடம் எப்போதும் வெறுப்பைக் காட்டாமல், உங்களின் எதிர்காலத்தை நினைத்து எங்களுக்கும் கவலை உண்டு என்பதையும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும்? என யோசிப்பதையும் அவர்களுக்கு உணர வையுங்கள். இச்செயல் உங்களது குழந்தைகளிடம் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.
தியானம் மற்றும் ஆரோக்கிய உணவுகள் : பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு மன ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கவனித்து கொள்வது முக்கியம். எனவே அவர்களுக்கு தியானம் செய்யவும், வெளியில் நடக்கவும், ஆரோக்கியமான உணவை சமைக்கவும் அல்லது புத்தகம் படிக்கவும் கற்றுக்கொடுங்கள். இதோடு அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குவதோடு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்ய வேண்டும்.
முக்கியமாக எப்போதும் குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி, துன்பம், பிரச்சனை என அனைத்து விஷயங்கள் பற்றியும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்க வேண்டும். இதனால் வாழ்க்கையில் எத்தகைய சவாலான சூழ்நிலைகள் வந்தாலும் உங்களது டீனேஜ் குழந்தைகள் எதையும் பெற்றோர்களிடமிருந்து மறைக்க மாட்டார்கள். நாங்கள் இருக்கிறோம், அனைவரும் சேர்ந்து உன்னுடைய பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறோம் என்று சொன்னால் போதும். எந்த மாதிரியான சமூகப் பிரச்சனைகள் வந்தாலும் ஈஸியாக கையாள்வதோடு, மன நிம்மதியையும் அவர்கள் பெற முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.