மேலும் இந்த சமயத்தில் தூங்காமல் கண் விழித்து படிப்பதும் சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பதும் நம் உடலுக்கு பல்வேறுவது பாதிப்புகளை உண்டாக்கும். முக்கியமாக இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் அவை நமது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன. இதைப் பற்றி வல்லுனர்கள் கூறுகையில், தேர்வுகளின் போது உண்டாகும் “எக்ஸாம் ஸ்டிரஸ்” என்பது நம் அனைவருக்கும் உண்டாகக்கூடிய ஒரு விதமான மன அழுத்தம் தான். நம்மில் அனைவருமே இதனை கடந்து தான் வந்திருக்கிறோம்.
எளிதான திட்டமிடல்: நம் என்னென்ன பாடங்களை எப்போது படிக்க வேண்டும் என்பதை பற்றி திட்டங்களை முன்கூட்டியே வகுத்து அதன்படி நேர அட்டவனையை அமைக்க வேண்டும். முக்கியமாக மிகக் கடினமான பாடங்களை கடைசியாக படிக்கலாம் என்று நினைப்பதற்கு பதிலாக முதலிலேயே அவற்றை படித்து முடித்து விடுவதன் மூலம் கடைசி நேரத்தில் எளிதான பாடங்களை விரைவாக நாம் படித்து முடித்து விடலாம்.
உதவியை நாடுவது: மாணவர்கள் தங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்களை உடன் வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் வெறுமனே உங்களை குறை கூறுபவர்களாக மட்டுமே அல்லாமல், உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள உதவுபவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களிடம் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கு உதவும்.
பாட புத்தகங்களை சரியாக வைப்பது: உங்களது படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் அடுக்கி வைப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் எந்தெந்த பாடத்திற்கான புத்தகங்கள் எங்கெங்கு உள்ளன என்பதும், கடைசி நேரத்தில் ஏற்படும் தேவையற்ற பதட்டங்களையும் தவிர்க்க இது உதவும்.