முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

உங்கள் குழந்தையின் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்கள் செய்தாலே நீரழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

 • 16

  குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

  ஒருவருடைய உடல் இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. முன்பு பெரியவர்களுக்கு மட்டுமே இந்த நோய் இருந்த நிலையில் தற்போது குழந்தைகளுக்கும் பாதிக்கப்படுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 26

  குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

  இதனால் தாகம் ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, சோர்வு மற்றும் எடை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைகளின் இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும் போது திசுக்களில் இருந்து திரவத்தை இழுக்க செய்கிறது இதனால் அதிக தாகம் உண்டாகிறது. மேலும் டைப் 1 நீரிழிவு நோயாளிகளை காட்டிலும் டைப் 2 நீரிழிவுக்கு ஆளான குழந்தைகளின் உடல் எடை வேகமாக குறைகிறது.உங்கள் குழந்தையின் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்கள் செய்தாலே இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

  MORE
  GALLERIES

 • 36

  குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

  உணவில் கவனம் : உங்கள் குழந்தைகள் அன்றாடம் சாப்பிடும் உணவு பொருட்களே அவர்களது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பாக்கெட்டுகள், பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை கொடுப்பதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக பழங்கள், வீட்டிலேயே செய்த தின்பண்டங்களை கொடுக்கலாம். கடைகளில் விற்பனை செய்யப்படும் பானங்கள் நீரழிவு நோய் ஏற்பட முக்கிய காரணமாகிறது. ஏனெனில் அதில், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்பதால் அதனை தவிர்த்து விடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

  நார்ச்சத்து அவசியம் : நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். இது நீரழிவு நோயை கட்டுப்படுத்த மட்டுமின்றி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் செய்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 56

  குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

  உடற்பயிற்சி : தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, ஓடி ஆடி விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவை சிறந்த பயன் தரும். வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்தபடி, வறுத்த, பொரித்த, நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றால் உடல் எடை அதிகரிக்கக் கூடும்.

  MORE
  GALLERIES

 • 66

  குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

  குழந்தைகளில் நீரிழிவு நோய் எவ்வளவு பொதுவானது? டைப் 1 நீரிழிவு என்பது குழந்தைகளுக்கு மிகவும் பொதுவான நாட்பட்ட நோய்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் 15,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் வகை 1 நீரிழிவு நோயால் கண்டறியப்படுகிறார்கள். அதேபோல இந்தியாவிலும், தற்போது குழந்தைகளுக்கு நீரழிவு நோய் அதிகரித்து வருகிறது.

  MORE
  GALLERIES