முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும், மொபைல் போன் அடிமையாவதைத் தடுப்பதற்கும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு உதவுவதற்கு சில டிப்ஸ்..

  • 18

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    புத்தகம் படிக்கும் திறன் குழந்தைகளுக்கு அறிவு மற்றும் கற்பனையின் உலகத்தைத் திறக்க கூடிய வல்லமை பெற்றது. ஆனால், இன்றைய குழந்தைகள் புத்தகங்களை விடவும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் செலுத்துகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 28

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    எனவே, குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வத்தை வளர்த்து, அவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடினமான ஒரு வேலையாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 38

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும், மொபைல் போன் அடிமையாவதைத் தடுப்பதற்கும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு உதவுவதற்கு சில டிப்ஸ்கள் உள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    வாசிப்பை வேடிக்கையாக மாற்றுங்கள் : முதலாவதாக, வாசிப்பை சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் மாற்றுவது முக்கியம். குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை சுவாரஸ்யமாக மாற்றினால், குழந்தைகள் புத்தகங்களை காதலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, கண்கவரும் விளக்கப்படங்கள் மற்றும் மனதைக் கவரும் கதைகளைக் கொண்ட புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படிக்க தரலாம். குழந்தைகள் தங்கள் சொந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கவும், மேலும் அவர்கள் விரும்புவதைக் கண்டறிய வெவ்வேறு வகைகளில் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    வாசித்து காட்டுங்கள் : உங்கள் பிள்ளைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நீங்கள் அவர்களுக்கு வாசித்து காட்டலாம். இது ஒரு இனிமையான மற்றும் இணைப்பு மிக்க செயலாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு வாசிப்பை நல்ல உணர்வுகளுடன் இணைக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையுடன் வாசிப்பதற்கான நேரத்தை செலவிடுங்கள். பரந்த அளவிலான புத்தகங்களுடன் வசதியான வாசிப்புப் பகுதியை உருவாக்குவதும் நல்லது. இது குழந்தைகள் தாங்களாகவே படிக்க அதிக ஆர்வம் ஏற்படுத்த உதவும்.

    MORE
    GALLERIES

  • 68

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    உதாரணம் மூலம் கற்பிக்கவும் : கல்வி நிபுணர் அஜய் குப்தா கூறுகையில், வாசிப்புப் பழக்கத்தை மாடலிங் செய்வது வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் மற்றொரு திறமையான முறையாகும். எனவே, குழந்தைகளுக்கு முன்பாக நீங்கள் அடிக்கடி படிக்கும்போது, அவர்களும் படிக்க விரும்புவார்கள். ஏனென்றால் குழந்தைகள் பெரும்பாலும் உதாரணம் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். குடும்பமாக புத்தகம் வாசிப்பதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். மேலும், உங்களின் வீடு முழுவதும் புத்தகங்கள் மற்றும் வாசிப்புப் பொருட்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இது ஆர்வத்தை தூண்டும்.

    MORE
    GALLERIES

  • 78

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    வாசிப்பை கொண்டாடுங்கள்: புத்தகங்களை படிக்கும் போது குழந்தைகளை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் முக்கியம். உங்கள் பிள்ளை ஒரு புத்தகத்தை முடித்ததும் அல்லது சில பக்கங்களை படித்து முடித்ததும் அவர்களின் சாதனையை அங்கீகரித்து கொண்டாடுங்கள். இதன் விளைவாக, அவர்கள் மேலும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் மற்றும் அவர்களின் வாசிப்புத் திறனைப் பற்றி நன்றாக உணருவார்கள்.

    MORE
    GALLERIES

  • 88

    குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வம் வர வைக்க உதவும் 5 வழிகள்..!

    வாசிப்பு பழக்கம் பற்றி குப்தாவின் கூற்றுப்படி, “ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியில் சிறு குழந்தைகளை வாசிப்பதில் ஆர்வம் காட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும். பெற்றோர்களும் கல்வியாளர்களும் குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் வாசிப்பதை ரசிக்க வைப்பதன் மூலமும், வழக்கமான வாசிப்பை ஊக்குவிப்பதன் மூலமும், குழந்தைகளுக்கு பெரிதும் சப்போர்ட் செய்யலாம்.

    MORE
    GALLERIES