குழந்தைகளை சாப்பிட வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. நாம் கொடுக்கும் எல்லா உணவுகளையும் அவர்கள் சாப்பிடுவதில்லை. சில சமயங்களில் நாம் கொடுக்கும் உணவுகளை சமத்தாக சாப்பிட்டு முடிப்பார்கள். சில சமயம் சாப்பிட மறுப்பதுடன் ஆடம் பிடிப்பார்கள். அப்படி, சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி என இங்கே பார்க்கலாம்.
சூப்பர் மார்க்கெட் அல்லது மளிகைக் கடைக்கு செல்லும் போது பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுமாறு உங்கள் பிள்ளையிடம் கேளுங்கள். சமைப்பதற்கு அவர்களது உதவியை நாடுங்கள். மாவு பிசைவது, பலம் உரிப்பது போன்ற வேலைகளை செய்யும் போது உணவு மீது இவர்களின் ஆர்வம் அதிகரிக்கும்.
உணவின் போது டிவி, மின்னணு சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. குழந்தை உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுது தான் நல்லா பசிக்கவும் செய்யும், குழந்தையும் வயிறு நிரம்பிய உணர்வை பெறுவார்கள். மொட்டை மாடியில் விளையாடவிட்டு உணவு கொடுப்பது. பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை காட்டி உணவு ஊட்டலாம்.