முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் பிள்ளைகளுக்கு காரில் டிராவல் பண்றதே பிடிக்காதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

உங்கள் பிள்ளைகளுக்கு காரில் டிராவல் பண்றதே பிடிக்காதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

லாவெண்டர், கிளாரி சேஜ், நெரோலி மற்றும் கெமோமில் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி காரின் சூழலை இனிமையாக வைத்திருங்கள். இது நிதானமான சூழ்நிலையை உருவாக்கவும், பதற்றத்தைத் தணிக்கும். மேலும், இவை மன அழுத்தம் நிறைந்த கார் பயணங்களை அமைதியானதாக மாற்றும் ஆற்றல் கொண்டது. அதே போன்று, காரில் சூரிய ஒளி நேரடியாக குழந்தைகளின் கண்களுக்குள் படும் பட்சத்தில், கார் நிழலை உள்ளே விடாத சில ஒளி தடுப்பான்களை பயன்படுத்தலாம்.

  • 15

    உங்கள் பிள்ளைகளுக்கு காரில் டிராவல் பண்றதே பிடிக்காதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

    குழந்தைகளுடன் காரில் பயணம் செய்யும் பெற்றோர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு குறித்த கவலை இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் கார் இருக்கையில் அமரும் போது சேட்டை செய்வது பயத்தை உண்டாக்கும். சில குழந்தைகள் கார் பயணத்தின் வசதியையும் பாதுகாப்பையும் விரும்புகிறார்கள், ஆனால் சில குழந்தைகளுக்கு கார் பயணங்கள் பிடிக்காமல் இருப்பதால் அழ தொடங்கி விடுவார்கள். குழந்தைகள் அக்கறையுள்ள பெரியவர்களாக முதிர்ச்சியடையும் வரை, அவர்கள் செய்யக்கூடியது உங்களுக்கு நிச்சயம் பதற்றத்தையும் அசௌகரியத்தையும் தரும். குழந்தைகள் காரில் மகிழ்ச்சியில்லாமல் பயணம் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது போன்ற அசௌகரியத்தை குறைக்க சில வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    உங்கள் பிள்ளைகளுக்கு காரில் டிராவல் பண்றதே பிடிக்காதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

    பயணத்திற்கு ஏற்ற ஆடை : குழந்தைக்கு நன்கு பொருந்தக்கூடிய மற்றும் வானிலைக்கு பொருத்தமான ஆடை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்தமான ஆடை அணிவதை பழக்கமாக வையுங்கள். அதிக வெப்பம் மற்றும் வியர்வையை தரும் உடைகளை அணியாதீர்கள். இதன் மூலம், காரில் சௌகரியமாக பயணம் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 35

    உங்கள் பிள்ளைகளுக்கு காரில் டிராவல் பண்றதே பிடிக்காதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

    இடைவெளி எடுக்க மறக்காதீர்கள் : குழந்தைகள் தங்கள் கால்களை நீட்டி மடக்க அவ்வப்போது இடைவெளி எடுத்து கொள்ள செய்யுங்கள். கார் பயணங்களுக்கு இடையில் புதிய காற்றை சுவாசிக்க வாய்ப்பு கொடுப்பதும் முக்கியம். குழந்தைகளை அவர்கள் விரும்பியபடி இருக்க விடுங்கள். மாறாக, அவர்களை அப்படியே ஒரே இடத்தில் பல நேரம் உட்காரும்படி செய்யாதீர்கள். மேலும், அவர்களின் பசியை அமைதிப்படுத்த வேண்டுமானால், இடைவேளையில் ஏதாவது சாப்பிட கொடுங்கள். ஒருவேளை, பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குழந்தை அசௌகரியமாக உணரத் தொடங்கினால், உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.

    MORE
    GALLERIES

  • 45

    உங்கள் பிள்ளைகளுக்கு காரில் டிராவல் பண்றதே பிடிக்காதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

    இருக்கைகள் : உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், கார் இருக்கைகள் சரியாக உள்ளதா என்றும், குழந்தையின் வயது மற்றும் நிலைக்கு ஏற்ப அவை சரியாகச் சீரமைக்கப்பட்டுள்ளதா என்றும் இருமுறை சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியம். இருக்கை சரியாக இல்லையென்றால், குழந்தையின் கழுத்து தவறான கோணத்தில் முறுக்கி, மூச்சுத்திணறல் அல்லது வலி ஏற்படலாம். மேலும், பயணத்தை இனிமையாக்க குழந்தைகளுக்கு பிடித்த பாடல்களை போட்டு மகிழுங்கள்.

    MORE
    GALLERIES

  • 55

    உங்கள் பிள்ளைகளுக்கு காரில் டிராவல் பண்றதே பிடிக்காதா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

    இனிமையான சூழல் : லாவெண்டர், கிளாரி சேஜ், நெரோலி மற்றும் கெமோமில் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி காரின் சூழலை இனிமையாக வைத்திருங்கள். இது நிதானமான சூழ்நிலையை உருவாக்கவும், பதற்றத்தைத் தணிக்கும். மேலும், இவை மன அழுத்தம் நிறைந்த கார் பயணங்களை அமைதியானதாக மாற்றும் ஆற்றல் கொண்டது. அதே போன்று, காரில் சூரிய ஒளி நேரடியாக குழந்தைகளின் கண்களுக்குள் படும் பட்சத்தில், கார் நிழலை உள்ளே விடாத சில ஒளி தடுப்பான்களை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES