முகப்பு » புகைப்பட செய்தி » செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

செக்ஸ்டிங் சார்ந்த விஷ்யங்களை யாராவது அனுப்பினால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் அல்லது நிர்வாண ஃபோட்டோ / வீடியோவை கேட்டு அழுத்தம் கொடுத்து கட்டாயப்படுத்தினால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது பற்றியெல்லாம் கேஷுவலாக கேளுங்கள்.

 • 19

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  சிறு குழந்தைகள் கூட ஸ்மார்ட் ஃபோனும் கையுமாக இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் செக்ஸ்ட்டிங் பற்றி குழந்தைகளிடம் பேசுவது பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகவும் சங்கடமான ஒரு விஷயமாகவே இருக்கும். தற்போது பள்ளி செல்லும் சிறு குழந்தைகளின் கையில் கூட பிரத்தேயகமாக மொபைல்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை தேவையற்ற மற்றும் வயதுக்கு மீறிய விஷயங்களில் இருந்து பாதுகாப்பது அவசியமாகிறது. செக்ஸ்ட்டிங் என்றால் என்ன என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

  MORE
  GALLERIES

 • 29

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  பாலியல் ரீதியான உணர்வைத் தூண்டக்கூடிய இமேஜ்கள், மெசேஜ்கள், வாய்ஸ் மெசேஜ்கள், வீடியோக்கள் போன்றவற்றை மொபைல், இன்டர்நெட், வெப்கேம் போன்றவற்றின் வழியே பெறுவது அல்லது அனுப்புவது செக்ஸ்டிங் (Sexting) அதாவது செக்ஸ் டெக்ஸ்ட்டிங் என குறிப்பிடப்படுகிறது. நன்மை, தீமை என உலகத்தில் உள்ள அத்தனை பற்றியையும் தங்கள் கைகளில் உள்ள சிறிய டிவைஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இன்றைய தலைமுறை குழந்தைகள் பெற்றுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 39

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  எனவே குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்ய பெற்றோர்கள் செக்ஸ் பற்றி அவர்களுக்கு சரியான விதத்தில் எடுத்துரைப்பது அவசியமானது. தெரிந்தோ, தெரியாமலோ இந்த பதின்ம வயது குழந்தைகள் மட்டுமல்லால் அதை விட வயது குறைவான குழந்தைகள் கூட செக்ஸ்ட்டிங்கில் ஈடுபடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வின்படி, சுமார் 40.5% ஆண் மற்றும் 30.6% பெண் டீனேஜர்ஸ் பாலியல் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பிரபல மருத்துவ நிபுணருமான ஹினா தாலிப், குழந்தைகளிடம் செக்ஸ்டிங் பற்றிய விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தலாம் என்பது பற்றிய சில டிப்ஸ்களை ஷேர் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 49

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  நோ சொல்ல பழக்குங்கள் : செக்ஸ் சம்மந்தமான விஷயங்களை ஒருவர் எப்படியெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்பது பற்றியும், அதற்கு எப்படியெல்லாம் மறுக்க வேண்டும் என்று உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதைப்பற்றி பேசும் போது குழந்தை சௌகரியமாக உணர, லேசான நகைச்சுவையோடு அவர்கள் கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 59

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  பீதியடையாதீர்கள் : உங்கள் குழந்தைகள் செக்ஸ்டிங்கில் ஈடுபட்டு ஆபாச அல்லது நிர்வாண ஃபோட்டோக்களை ஷேர் செய்தாலோ அல்லது பெற்றாலோ பெற்றோர்கள் பயம் அல்லது அதிர்ச்சியடைய தேவையில்லை. முகத்தில் அதிர்ச்சி அல்லது கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக அவர்களை டீல் செய்யுங்கள். நீங்கள் கடுமையாக நடந்து கொண்டால் அதை அவர்கள் மிகவும் அவமானமாக உணர்வார்கள். இதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு கடும் தீங்கு ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 69

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  நேக்காக பேசுங்கள் : உங்கள் குழந்தையிடம் ஜாலியாக பேசி அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். அதே போல செக்ஸ்டிங் சார்ந்த விஷ்யங்களை யாராவது அனுப்பினால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் அல்லது நிர்வாண ஃபோட்டோ / வீடியோவை கேட்டு அழுத்தம் கொடுத்து கட்டாயப்படுத்தினால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது பற்றியெல்லாம் கேஷுவலாக கேளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 79

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  அவர்களுக்கு விருப்பமான நபர்களை வைத்து பேசுங்கள்; உங்கள் டீனேஜ் குழந்தைகளிடம் செக்ஸ்டிங் பற்றி பேச தயக்கமாக இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு விருப்பான வேறொரு பெரியவர்களை கொண்டு பேச வைக்கலாம். முதலில் உங்கள் மனதில் இருக்கும் கவலைகளை குறிப்பிட்ட நபரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பின்னர் குழந்தைகளிடம் அவர்களை பேச வையுங்கள்.

  MORE
  GALLERIES

 • 89

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  உதாரணங்களை சொல்லுங்கள் : சிறார் ஆபாச படங்களை வைத்திருந்த காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்ட மைனர் பற்றிய விஷயங்களை ஒரு உதாரணமாகப் பயன்படுத்தி, உங்கள் பிள்ளையிடம் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பதை எடுத்து கூறுங்கள்.

  MORE
  GALLERIES

 • 99

  செக்ஸ்ட்டிங் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேச தயக்கமா..? நிபுணரின் டிப்ஸ்கள் இங்கே..!

  டெலிட் : உங்கள் குழந்தையின் அல்லது வேறு ஒரு மைனாரின் அரைகுறை / நிர்வாண ஃபோட்டோக்கள் அல்லது வீடியோக்கள் அவர்களது ஃபோனில் இருந்தால் அதை உடனடியாக அவர்களை வைத்தே டெலிட் செய்யுங்கள். ஏன் டெலிட் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அவர்களுக்கு கோபப்படாமல் விளக்குங்கள்.

  MORE
  GALLERIES