அந்த வகையில் வீட்டில் நாம் சரியான செயல்களை சொல்லி தந்தாலும் சில நேரங்களில் வெளியில் அவர்கள் பழக கூடிய நண்பர்களை பொறுத்து அவர்களின் நடத்தையில் மாறுபாடு ஏற்படலாம். எனவே இதை தடுக்க குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களை எப்படி தேர்வு செய்வது என்பதை பெற்றோர்கள் சொல்லி தரலாம். இதை பற்றி மேலும் விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நல்ல நண்பர்கள் : பொதுவாக குழந்தைகள் வெளி உலகிற்கு வந்தவுடன் அவர்களுடன் பழகும் ஒவ்வொருவரையும் பெற்றோர்களால் கண்காணிக்க முடியாது. எனவே இதற்கு மாறாக குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களை தேர்வு செய்வது எப்படி என்பதை தெளிவாக கூறலாம். அதாவது தன்னை மோசமாக நடத்தாத நபரை தேர்வு செய்ய சொல்லி தரலாம். மேலும், எப்போதும் தன்னுடன் உறுதுனையாக இருக்க கூடிய நண்பரை தேர்வு செய்ய ஊக்கமளிக்கலாம்.
பிற குழந்தைங்கள் : பொதுவாக குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு விளையாட செய்வதன் மூலம் அவர்களின் திறன்கள் அதிகரிக்கும். மேலும் இதனால் வெளி உலகில் உள்ளவர்களை பற்றி அவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் பேச கூடிய நபர் நல்லவரா அல்லது கெட்டவரா என்பதை அவர்கள் சிறு வயதிலேயே தெரிந்து கொள்ள இது உதவும். வீட்டிற்குள்ளே குழந்தைகளை வைத்து கொண்டால் மனிதர்களை சரியாக அடையாளம் காண முடியாது.
நேரம் செலவிடுதல் : குழந்தைகளின் உலகம் மிகவும் தனித்துவமானது. எனவே, நீங்கள் உங்கள் குழந்தையை பற்றி முழுவதுமாக புரிந்து கொள்ள அவர்களுடம் தினமும் நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் அவர்களின் அன்றாட செயல்கள் பற்றி உங்களுக்கு தெரிய வரும். இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு உங்கள் மீதி நம்பிக்கை பிறக்கும். அதே போன்று இந்த நேரத்தை பயன்படுத்தி நல்ல நண்பர்களை எப்படி தேர்வு செய்வது என்பதையும் நீங்கள் சொல்லி தரலாம்.
குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களை தேர்வு செய்வதில் பல குழப்பம் இருக்க கூடும். மற்ற குழந்தைகளில் சிறந்த நண்பனை தேர்ந்தெடுக்க அவரை பற்றி உங்கள் குழந்தை கொஞ்சமேனும் அறிய வேண்டும். அப்போது தான், அவருடன் நட்பு வைக்கலாமா, கூடாதா என்பதை அவர்கள் தேர்வு செய்ய முடியும். அதே போன்று ஆரோக்கியமான உறவையும் அவர்கள் மேற்கொள்ள முடியும்.