உடற்பயிற்சிகள் : சில உடல் சார்ந்த விளையாட்டுகள், ஆக்டிவிடீஸ், உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய ஊக்கப்படுத்துங்கள். அதன் நன்மைகளையும், அமர்ந்தே இருப்பதால் வரும் தீமைகளையும் கற்றுக்கொடுங்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியம்தான் சிறந்த வாழ்க்கைக்கான அடிப்படை என்பதை எப்போதும் சொல்லிக்கொடுங்கள். அதற்குதான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். விளையாட்டுப் பயிற்சிகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.
தனிப்பட்ட நேரம் : ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கான நேரம் என்பது மிகவும் அவசியம். எனவே அதை தினமும் அவர்களுக்கு கொடுப்பதில் உறுதியாக இருங்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு பிடித்த மாதிரி புத்தகங்கள் வாசிப்பது, பெயிண்டிங், பாட்டுப்பாடுதல் இப்படி தன் விருப்பத்தை செய்யட்டும். சும்மாவே அமர்ந்து சுவற்றை பார்த்துக்கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. இப்படி அந்த தனிமையின் அவசியத்தை கற்றுக்கொண்டுங்கள். இந்த தனிமை நேரம்தான் அவர்களின் மனதை உற்சாகப்படுத்தும்.
தூக்க நேரத்தின் அவசியம் : அவர்களின் தூக்க நேரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..தூங்கும்போது உடலில் நடக்கும் செயல்பாடுகள் என்ன என்பன போன்ற விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். எனவே குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை உறுதி செய்யுங்கள்.