ஒவ்வொரு பெண்ணுக்கும் மகப்பேறு என்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு தருணம். இந்த சமயங்களில் மிகவும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விஷயங்களிலும் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது நீங்கள் சவுகரியமாக உணரும் வகையில் ஆடை அணிவது மற்றும் காலணிகளை அணிவதும் முக்கியம்.
மேலும் நீங்கள் மிகவும் ஸ்டைலாக இருந்தால் கர்ப்பத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் வசதியான ஆடைகளையும், சில காலணிகளையும் உங்கள் பாணிக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் உங்கள் கர்ப்பக்காலத்தை ஒரு வசதியான பயணமாக மாற்ற விரும்பினால் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய சில காலணிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்னீக்கர்கள் (Sneakers) : ஸ்னீக்கர்களை விட சிறந்த ஜோடி காலணிகள் கட்டாயமாக இருக்க முடியாது. நீளமான குர்தா, பைஜாமாக்கள் அல்லது மகப்பேறு ஜீன்ஸ் ஆகிய உடையை அணியும் போது, நீங்கள் ஸ்னீக்கர்களை அணிந்துகொண்டு முன்பைப் போலவே ஸ்டைலாக தோற்றமளிக்கலாம். மேலும், உங்கள் கால்களுக்கு நல்ல ஆறுதலை இந்த காலணிகள் தரும்.
ஸ்லைடுகள் (Slides) : இது பாதத்தின் மேற்பரப்பை பிடித்திருக்கும் வண்ணம் ஒரு குறுகிய பட்டையுடன் பின்புறங்கள் ஓபனாகவும் இருக்கும். தட்டையான குதிகால் அமைப்பை கொண்ட இந்த காலனிகள் அணிந்து கொள்ள மிகவும் வசதியானதாக இருக்கும். நீங்கள் அவற்றை வீட்டிலேயே அணிந்து கொள்ளலாம். மேலும் இவை தற்போது புழக்கத்தில் இருப்பதால் அவற்றை அணிந்துகொண்டும் நீங்கள் வெளியே கூட செல்லலாம். இந்த காலணிகள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.
கோலாபுரிகள் (Kolhapuris) : நீங்கள் எத்தினிக் உடைகள் அணிவதை விரும்பினாலோ, அல்லது கர்ப்பகாலத்தில் நீங்கள் ட்ரடிஷனல் குர்தாக்களை அணிய விரும்பினாலோ அதனுடன் இந்த கோலாபுரி சப்பல்களை போட்டுக்கொள்ளலாம். இவை கையால் வடிவமைக்கப்பட்ட தோல் செருப்புகள் மற்றும் அவை காய்கறி சாயங்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் பதப்படுத்தப்படுகின்றன. எனவே, எந்த ஒரு அசைவுகரியங்களையும் நீங்கள் உணர மாட்டிர்கள்.
பிளாட்ஸ் (Flats) : கர்ப்பகாலத்தில் பெண்கள் ஹீல்ஸ் அணிந்து செல்வது நல்லதல்ல. ஏனெனில் இந்த காலகட்டத்தில் பெண்கள் கால்வலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளை சந்திப்பர். உண்மையில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹீல்ஸ் அணிய வேண்டாம் என கர்ப்பிணிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். எனவே, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிறந்த வழி பிளாட்ஸ் பாதணிகளை அணிவது தான். நீங்கள் சப்பல்கள், ஸ்ட்ரிங் பிளாட்ஸ் மற்றும் ஓபன் டோ பிளாட்ஸ் காலணிகளை அணியலாம்.