காஃபி அருந்துதல் : காலை எழுந்தவுடன் காஃபி அருந்தும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் வெறும் வயிற்றில் குடிப்பது தவறு. குறிப்பாக கர்ப்பகாலத்தில் காஃபியை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காஃபில் உள்ள கஃபைன் சிறுநீரை அதிகம் வெளியேற்றும். இதனால் நீர்ச்சத்து குறையும். இப்படி நீர்ச்சத்து குறைந்தால் பல அபாயங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக அதிக கஃபைன் கருக்கலைதல், சீக்கிரமே குழந்தை பிறத்தல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் காஃபியை தவிர்த்தல் நல்லது.
புகை , சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் : பொதுவாகவே இந்த மூன்று பழக்கங்களை கருவுற்ற நேரத்தில் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைன் கருவுக்கு செல்லும் ஆக்ஜினை தடை செய்கிறது. இதனால் ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை போன்ற பாதிப்புகளை குழந்தை பிறந்த பிறகு சந்திக்க நேரிடும். சில நேரங்களில் கருச்சிதைவும் உண்டாகலாம். மது பழக்கமும் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குறைமாதப் பிரசவம் போன்றவை உண்டாகும்.
துரித உணவுகள் : கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவு உட்கொள்வதால், தாய்க்கு எடை அதிகரிக்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக எடை காரணமாக குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் பிரசவிக்கும் நேரத்திலும் சிக்கல்கள் வரலாம்.சில ஆய்வுகள் மூலம் செயற்கை உணவு வண்ணம் மற்றும் இரசாயன சேர்க்கைகள் காரணமாக கருவில் உள்ள குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடுகள் வர வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரமின்மை : கருவுற்றிருக்கும் இருக்கும் போது ஏற்படும் மசக்கை காரணமாக ஒருவித சோர்வும், சோமேறித்தனமும் இருந்து கொண்டு இருக்கும். இந்த நேரத்தில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வைரஸ் மற்றும் பேக்டீரியா நோய்த்தொற்றுகள் எளிதாக தாக்கலாம். ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன் அதிகமாக சுரப்பதால் பல் ஈறுகளில் இரத்தகசிவு உண்டாகலாம். இதனால் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது தொற்றாக மாறி கருவின் குழந்தையை தாக்கலாம்.
அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். குளிக்கும் போது அந்தரங்க பகுதியில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். சொளகரியமான மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துங்கள். அதிகமாக வியர்வை வெளியேறினால் உடனே உடை மாற்றிக் கொள்ளுங்கள். தினமும் தவறாமல் குளிக்க வேண்டும். பெண்ணுறுப்புகளை சுகாகாதார வைக்க வேண்டும்.