ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

Child Health : குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதை இந்த அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

 • 17

  உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

  ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், குழந்தைகள் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது. குழந்தைகளின் வளர்ச்சியை மட்டும் இல்லாமல் உங்கள் குழந்தை ஆக்டிவாக இருப்பதற்கும், உடல் ரீதியாக எல்லா செயல்களையும் செய்வதற்கு போதுமான ஆற்றலும், சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் ஊட்டச்சத்து அவசியம்.

  MORE
  GALLERIES

 • 27

  உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

  சில நேரங்களில் உங்கள் குழந்தை சோர்வாக காணப்படலாம் அல்லது மந்தமாக இருக்கலாம். தற்காலிகமாக இவ்வாறு தோன்றுவது இயல்பானது. ஆனால், எதையும் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது, தீவிரமான பிடிவாதம் பிடிப்பது அல்லது எல்லா செயல்களையும் மெதுவாக செய்வது போன்ற பல்வேறு அறிகுறிகளை நீங்கள் அவ்வப்போது குழந்தைகளிடம் காணலாம். ஆனால், எது இயல்பானது எது அவர்களை பாதிக்கும் தன்மை கொண்டது என்பதை சில எளிய முறைகளில் கண்டறியலாம்.உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

  எடை குறைவு அல்லது எடை அதிகரிப்பு :பெரியவர்களே ஒப்பிடும் போது குழந்தைகள் அவ்வளவு விரைவாக எடை குறையாது அல்லது அதிகரிக்காது. ஆனால் உங்கள் குழந்தைக்கு மால்-நியூட்ரிஷியன் என்ற ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், உங்கள் குழந்தை எடை குறைந்து மெலிந்து, வெளிறிய தோற்றத்தில் காணப்படும். அதே போல, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருந்தால் உடல் பருமனாகவும், விரைவாக உடல் எதையும் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

  அடிக்கடி உடல்நலம் பாதிப்பு :குழந்தைகளுக்கு அவ்வப்போது காய்ச்சல், சளி ஆகியவை தோன்றும். வளரும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து செயல்படும் பொழுது உடல் ஒரு சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்தும். ஆனால், குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது என்றால், அவர்களால் நோய் பாதிப்பை எதிர்த்து போராடும் அளவுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதே அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 57

  உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

  அதீதமான மனநிலை மாற்றங்கள் :கோபப்படுவது, எரிச்சல் அடைவது, கத்துவது அல்லது தனியாகவோ அமர்வது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் என்று எல்லா வயதினருக்கும் பொருந்தும். ஆனால் ஒரு சில குழந்தைகள் எப்போதுமே பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருப்பார்கள் அல்லது எப்போதும் எதைக்கேட்டாலும் இயல்பாக பதில் இல்லாமல் கத்துவார்கள். அடிக்கடி எரிச்சலான அல்லது அதீத கோபமான மனநிலையில் காணப்படுவார்கள். இதைப்போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

  சோம்பேறித்தனம் :பொதுவாகவே குழந்தைகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அவ்வாறு இருந்தாலும் கூட, பிடித்த விஷயங்களை செய்ய சுறுசுறுப்பாக செயல்பாடுவார்கள். ஆனால், சில நேரங்களில் சோம்பேறித்தனமாக இருப்பதற்கும், உடலில் ஆற்றல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. உங்கள் குழந்தை முன்னர் சுறுசுறுப்பாக செயல்பட்டு சமீபகாலமாக சோம்பேறித்தனமாக இருப்பதாக நீங்கள் கண்டறிந்தால் இதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்..

  கற்றல் குறைபாடு மற்றும் கவனச்சிதறல் :சரியாக ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்டால்தான் உடலுக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்கிறதோ அதே போல மூளை சார்ந்த செயல்களுக்கும் ஆற்றல் கிடைக்கும். உதாரணமாக உங்கள் குழந்தை சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்பது ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும் இருக்கலாம்.

  MORE
  GALLERIES