கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் தூக்கமில்லாத இரவுகளை அனுபவிப்பார்கள், தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது முக்கியம். தாய்க்கு சரியான தூக்கம் இல்லையென்றால் பெரும்பாலும் முன்கூட்டிய குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ச்சியில் குறைபாடு மேலும் பல மோசமான சிக்கல்கள் ஏற்படும். இருப்பினும், அதிக தூக்கம் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என ஆய்வு கூறுகிரது. ஆம், ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறது.
GERD சிக்கல்: கர்ப்ப காலத்தில், வயிற்றில் கூடுதல் அழுத்தம் GERD க்கு வழிவகுக்கும். GERD என்பது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் எனப்படும். உணவுக்குழாயின் அடிப்பகுதியில் தளர்வான தசை வளையம் உள்ள பெண்களுக்கு இது ஒரு பொதுவான பிரச்சினையாகும். இது வயிற்றுக்குள் உணவை நீண்ட நேரம் இருக்க செய்யும். இதனால் உணவுகள் மற்றும் ஆசிட்கள் மீண்டும் தொண்டைக்கு வர ஆசிட் ரிஃப்ளக்ஸ்க்கு வழிவகுக்கிறது. குறிப்பாக நீங்கள் தூங்காலம் என்று படுக்கும்போது இது தூக்கத்தை சீர்குலைக்கிறது.
ஸ்லீப் அப்னியா: ஸ்லீப் அப்னியா என்பது ஒரு வகை மூச்சுத்திணறல் நோயாகும். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் கர்பிணிகள் தூக்கம் மற்றும் சோர்வாக உணர்ந்தால், அவர்களுக்கு ஸ்லீப் அப்னியா என்ற மூச்சுத்திணறல் சிக்கல் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. இந்த சிக்கல் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தொடர் வேலையால் ஏற்படும் கால் வலி: பல கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் நடத்தல் மற்றும் பல்வேறு வீட்டு வேலைகளை செய்வதாலும் வயிற்றில் கனத்தை வைத்திருப்பதாலும் கால்கள் கடுமையாக வலிக்கும். இதனாலும் அவர்களின் தூக்கம் கெடும். மேலும் இது உடலுக்குள் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதாலோ அல்லது ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து இல்லாததாலோ இந்த சிக்கல் ஏற்படும்.
உடல் செயல்பாடுகள்: மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு வழக்கமான உடல் செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடலாம். உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்களை சோர்வடையச் செய்து உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கர்ப்பகால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும், மேலும் நீங்கள் நிம்மதியாக தூங்கவும் இது உதவும்.
பயம் மற்றும் கவலை: குழந்தை பிறப்பு பற்றிய கவலை பயம் இவற்றால் கூட உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். எனவே ஒரு நல்ல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது பலனளிக்கும். கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளை அடிக்கடி நினைப்பது நல்ல தைரியத்தை தரும். மேலும் மனதில் மகிழ்ச்சியை நினைத்தால் நாளும் மகிழ்ச்சியாக கழியும்.
தூக்கத்திற்கு செய்யவேண்டியது: முதலில் தூங்குவதற்கான இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். நல்ல காற்றோட்டமான இடம், நீர் போன்ற தேவையானவற்றை வைத்துக்கொண்டு தூங்கினால் அன்றைய தினம் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். நீங்கள் தூங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் கேட்ஜெட்களிலிருந்து விலகி இருங்கள்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்: சிறுநீர்ப்பையில் அதிகரித்த அழுத்தம் காரணமாக, கர்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுந்திருக்க நேரிடும். இது உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும். எனவே தூங்குவதற்கு முன்பே சிறுநீர் கழித்து விட்டு தூங்குங்கள். முதல் மற்றும் மூன்றாவது மாதங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால் கூட பல பெண்கள் நிம்மதியாக தூங்க முடியாது. வளர்ந்து வரும் குழந்தை சிறுநீர்ப்பையில் கூடுதல் அழுத்தத்தை கொடுப்பதால் இது நிகழ்கிறது.